அடேங்கப்பா யாரு சொன்னது திமுக எழைகள் கட்சி என்று பிரசாந்த் கிஷோருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா அரண்டு போன உடன்பிறப்புகள் !

திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று அதிகாரப்பூர்வமாக வருகின்ற 2021 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிற்கு IPAC எனப்படும் பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வெற்றிக்கு வியூகம் வகுக்கும் அமைப்புடன் சேர்ந்து பணியாற்ற போவதாக அறிவித்தார், அப்போது தொடங்கி தற்போது வரை பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Loading...

வடநாட்டு அரசியல்வாதிகளை விமர்சனம் செய்து வந்த திமுகவினர் வடநாட்டை சேர்ந்த பிராமணர் ஒருவரின் தயவில் வெற்றிக்கு வியூகம் வகுக்க படுவதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றனர், மேலும் திமுகவினருக்கு தேவை கொள்கையோ கோட்பாடோ கிடையாது என்றும் தேவையில்லை என்றால் பிராமணர்களை விமர்சிப்பார்கள், தங்களுக்கு தேவை என்றால் பிராமணர் ஒருவர் தலைமையில் வெற்றி வேண்டுமென்று உடன்பாடு செய்து கொள்வார்கள் என ட்விட்டரில் பேசப்படுகிறது.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இனி திமுக தலைவர் ஸ்டாலின் MK ஸ்டாலின் கிடையாது, PK ஸ்டாலின் என பிரசாந்த் கிஷோரை முன்வைத்து கிண்டல் அடித்துள்ளார், சரி இத்தனை இடர்பாடுகளை தாண்டி நீண்ட ஆலோசனைக்கு பிறகு பிரசாந்த் கிஷோர் கார்ப்பரேட் கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்தது ஏன் எனவும், அதற்கான தொகை எவ்வளவு எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Loading...

கடந்த நாடாளுமன்ற வெற்றிக்குப்பிறகு எப்படியும் அடுத்த ஆட்சி திமுக உடையது எனவும் தான் அடுத்த முதலமைச்சர் ஆவது உறுதி எனவும் மக்கள் ஆதரவு திராவிட முன்னேற்ற கழகத்திற்கு உள்ளது எனவே யாருடைய தயவும் தேவையில்லை என்று முடிவெடுத்திருக்கிறார்கள் அதன் பிறகு நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் திமுக தோல்வியை தழுவிய நிலையில் சமூகவலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததும் அதனை கட்டுபடுத்த முடியாமல் திமுக ஐ டி விங் திணறியுள்ளது.

மேலும் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை திமுக மிகப்பெரிய வெற்றியை எதிர்பார்த்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் 60% இடங்கள் குறைவாக கிடைத்துள்ளன இதே நிலை நீடித்தால் அடுத்த சட்டமன்ற தேர்தலின்போது ரஜினியின் வருகை உள்ளிட்ட மாற்றங்கள் திமுக வாக்கு வங்கியில் குறைவை ஏற்படுத்தும் என்பதால் பெரியாரிஸ்ட்கள் பிராமணர் விமர்சனம் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு நேரடியாக பிரஷாந்த் கிஷோரிடம் பேசி டீல் ஓகே செய்திருக்கிறாராம்.

அதற்கு கடந்த ஆந்திர மாநில தேர்தலில் ஜெகன் மோகன் கொடுத்த பணத்தில் இரண்டு மடங்கு பேசி டீல் ஓகே செய்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது ஜெகன் மோகன் பிரசாந்த் கிஷோர் நிறுவனத்திற்கு 500 கோடி ரூபாய் கொடுத்தார் என்று தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது, பிரசாந்த் எப்போதும் எதிர்க்கட்சிகள் வசம் பொறுப்பை எடுத்து அதனை வெற்றி பெற வைத்திருக்கிறார், குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் 2016 உத்திர பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வேலை பார்த்தார் பிரசாந்த் கிஷோர் ஆனால் அவர்கள் கட்சி படு தோல்வி அடைந்தது மாறாக பாஜக வெற்றிபெற்றது , கடந்த ஆண்டு ஆந்திராவில் ஜெகன் மோகன் கட்சிக்கு வேலை பார்த்திருக்கிறார் அங்கு அந்த கட்சி மிக பெரிய வெற்றியை அடைந்துள்ளது.

வெளிமாநில பிராமணர் நிறுவனத்திற்கு கோடி கோடியாய் அள்ளிக்கொடுத்த கட்சி தலைமை, தங்களுக்கு 200 ரூபாய்க்கு மேல் கொடுப்பதில்லை என வருத்தத்தில் இருக்கிறார்களாம் உடன் பிறப்புகள்.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2659 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*