Connect with us

#24 Exclusive

அடேங்கப்பா திமுகவில் இணைந்த அரசகுமாருக்கு என்ன பதவி தெரியுமா? உடன்பிறப்புகள் கொண்டாட்டம்.

Published

on

சென்னை.,
இன்று திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்துள்ளார் பாஜக துணை தலைவராக இருந்த அரசகுமார் இந்நிலையில் அரசகுமார் வரலாற்றை பார்க்கலாம்., 1991 -1996 அதிமுகவின் ஆட்சியில் கொடிகட்டி பறந்த புதுக்கோட்டை பிரேமானந்தசாமியின் ஆசிரமத்தில் இருந்து அதன்பிறகு தனது சொந்த ஊரான மருதாந்தலையின் பஞ்சாயத்து தலைவராக 2001-ல் வந்தவர் அரசகுமார்.

பிறகு கல்வி வள்ளலாக அவதாரமும் சாதி
தலைவராகவும் உருவெடுத்து திராவிட விழிப்புணர்ச்சி கழகம் அடுத்து தேசிய பார்வர்ட் பிளாக் என்கிற கட்சியை உருவாக்கி தன்னை தமிழக அரசியலில் நிலை நிறுத்திகொண்டவர் .

Loading...

அதிமுகவின் தேவர் ஓட்டுக்களை பிரிக்க திமுக இவரை பயன்படுத்தி வருகிறது என்று
கூறுவார்கள்.இதனாலேயே இவரை 2013ல்
ஜெயலலிதா குண்டர் சட்டத்தில் தூக்கி உள்ளே போட்டார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது, அதன்பிறகு அவர் வெளியேவர திமுக துணை நின்றது. அதனால் திமுகவின் நிரந்தர ஆதரவாளராக மாறினார் அரசகுமார்.

Loading...

இவர் எப்படி பபாஜகவிற்குள் வந்தார் மாநில துணைத் தலைவராக உயர்ந்தார் என்பது முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை அவர்களின் காலத்தில்தான் நடந்தது,
ஏனென்றால் இவர் 2014 லோக்சபா தேர்தலுக்கு பிறகு தான் பாஜகவிற்கு வந்தார். 2014 லோக்சபா தேர்தலில் தேசிய பார்வர்ட் கட்சியின் சார்பாக ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டார். அதன் பிறகு பாஜகவில் இணைந்த அவருக்கு மாநில துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது.

பிடிகே என்கிற பெயரில் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருபவர் அரசகுமார் இந்நிலையில் புதுக்கோட்டை திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு திமுகவினையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் புகழ்ந்து பேசியதால் பாஜக தொண்டர்களின் எதிர்ப்பை சந்தித்தார். இந்த சூழலில்தான் இன்று திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார் அரசகுமார்.

பாஜகவில் மாநில துணை தலைவராக இருந்த அரசகுமாருக்கு திமுகவில் என்ன பதவி கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் அரசகுமாருக்கு அமமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்த தங்க தமிழ் செல்வனுக்கு கொள்கைப்பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது போல் அரசகுமாருக்கும் அதே பதவி வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அரசகுமார் திமுகவில் இணைந்த சூழலில் என்னென்ன ஆபத்துகள் அடுத்தடுத்து மத்திய அரசிடம் இருந்து வரப்போகிறதோ என அதிர்ச்சியில் இருக்கிறாராம் ஸ்டாலின் அரசகுமார் திமுகவில் இணைவதாக கூறிய நிலையில் எல்லாவற்றையும் நன்றாக சிந்தித்துதான் இந்த முடிவை எடுத்தீர்களா என மீண்டும் மீண்டும் கேட்டிருக்கிறாராம் ஸ்டாலின். அது சரி அவருக்கு அவருடைய வருத்தம் !இந்நிலையில் திமுகவில் இணைந்த அரசகுமாரை திமுக தொண்டர்கள் வரவேற்று சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

error: Content is protected !!

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/tnnews24/public_html/wp-includes/functions.php on line 4552