ஆசியா 11 அணி அறிவிப்பு கழட்டிவிடப்பட்ட பாகிஸ்தான் மொத்தம் 6 இந்திய வீரர்கள் இரண்டு T20முழு விவரம் .

ஆசியா 11 அணி அறிவிப்பு கழட்டிவிடப்பட்ட பாகிஸ்தான் மொத்தம் 6 இந்திய வீரர்கள் இரண்டு T20முழு விவரம் .

வரும் மார்ச் மாதம் 18 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஆசியா 11 மற்றும் உலக 11 அணிகள் இடையே 2 T20போட்டிகள் நடைபெறவுள்ளது . இந்த போட்டிகளை வங்கதேசம் நடத்தவுள்ளது இது தொடர்பான அறிவிப்புகள் வெளியானது முதலே அந்த அணியில் நிச்சயம் தோனி இருப்பார் அவர் கேப்டனாக கூட செயல்பட வாய்ப்புள்ளது என்பதுபோன்ற செய்திகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்நிலையில் நேற்று ஆசிய 11 அணியில் விளையாடும் வீரர்களின் விவரம் வெளியாகியுள்ளது அதன்படி

ஷிகர் தவான் , கே எல் ராகுல் , தமீம் இக்பால் , விராட் கோலி லிண்டன் தாஸ் , ரிஷப பண்ட் , முஸ்தாபிக்குர் ரஹீம் , திசாரா பெரேரா , ரஷீத் கான் , முஸ்தாபிக்குர் ரகுமான் , சந்தீப் லமைச்சாணி , லசித் மலிங்கா , குலதீப் யாதவ் , மொஹம்மது ஷமி , முஜீப் உர் ரகுமான் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர் .

Loading...

இந்த 15 பேர் கொண்ட அணியில் 6 இந்திய வீரர்கள் உள்ள நிலையில் அதில் 5 வீரர்கள் நிச்சயம் ஆட்டத்தில் இருப்பார்கள் . குலதீப் யாதவ் மாற்று வீரராக வெளியில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இந்நிலையில் ஆசிய கண்டத்தில் இந்தியா , பாகிஸ்தான் , வங்கதேசம் , இலங்கை , ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 5 டெஸ்ட் அந்தஸ்து கொண்ட அணிகள் உள்ள நிலையில் இந்த ஆசிய 12 அணியிலிருந்து பாகிஸ்தான் கழட்டிவிடப்பட்டுள்ளது .

Loading...

அதற்க்கு பாகிஸ்தானில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டி காரணமாக கூறப்பட்டுள்ளது . மேலும் இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் ஷர்மா , ஹர்டிக் பாண்டியா , பும்ரா உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற பிசிசிஐ அனுமதியளிக்கவில்லை . இது ரசிகர்களை சற்று சோகப்படுத்தினாலும் . புதிய முயற்சியாக நடைபெறும் ஆசியா 11 vs உலக 11 போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது

Loading...

Tnnews24 Digital

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *