வெட்கமாக இல்லை ! மதுரையில் வெளுத்து வாங்கிய ஸ்மிருதி இராணி வடக்கே உள்ளவர்களுக்கும் ஸ்டாலினை பற்றி தெரிந்து விட்டதா வீடியோ இணைப்பு !

மதுரை :- குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாஜக சார்பில் நாடுமுழுவதும் பொதுக்கூட்டங்கள் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன, இதனை அடுத்து வட மாநிலங்களுக்கு இணையாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் CAA சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டு வருகிறது, அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கலந்து கொண்ட பொதுக்கூட்டம் இன்று நண்பகலில் நடைபெற்றது.

Loading...

கூட்டத்திற்கு தென் மாவட்டங்களில் இருந்து வந்த பலரும் கலந்து கொண்டனர், இக்கூட்டத்தில் ஸ்மிருதி இராணி பேச அதனை பேராசிரியர் ஸ்ரீனிவாசன் தமிழில் மொழி மாற்றம் செய்து பேசினார், தொடக்கத்தில் அமைதியாக தனது உரையை மதுரை மீனாட்சி பெயரில் தொடங்கினார், அதனை தொடர்ந்து 72 கால காங்கிரஸ் அரசு தான் ஒன்று பட்ட இந்தியாவை மதத்தின் அடிப்படையில் பிரித்தது என்றும், அதனை ஒரு குடும்பத்தின் கையில் வைத்திருந்தது என்றும் குற்றம் சுமத்தினார்.

அதன் பிறகு திமுக குறித்து மிகவும் காரசாரமாக ஸ்மிருதி இராணி வெளுத்து வாங்கிவிட்டார், எல்லையில் இந்திய இராணுவ வீரனை சுட்டு வீழ்த்தும் நாட்டை சேர்ந்தவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று இங்கு போராடுகிறீர்களே உங்களை நினைத்து வெட்கமாக இருக்கிறது என்று கூறிய அவர், அடுத்ததாக ஒரு புடி புடித்தார் இப்போதுதான் உங்களுக்கு இலங்கை தமிழர்கள் கண்ணுக்கு தெரிகிறார்களா 2007 – ம் ஆண்டு முதல் கூட்டணியில் இருந்த நீங்கள் இலங்கையில் இருந்து வரும் தமிழர்களுக்கு குடியுரிமை கேட்டு ஏன் காங்கிரஸ் கட்சியை வலியுறுத்துவில்லை என்று கேட்ட அவர்.,

Loading...

எங்களுக்கு தெரியும் மன்மோகன் உங்கள் குடும்பத்திற்கு இந்திய கஜானாவை கொள்ளை அடிப்பதற்கு தாராளமாக உரிமை கொடுத்திருப்பார் அதுதான் அமைதியாக இருந்திருப்பீர்கள் என்றும் இப்போது பேச வெட்கமாக இல்லை என்று கடும் ஆவேசமாக பேசினார். பிறகு பாகிஸ்தான் பிரிந்த பிறகு முதல் சட்ட அமைச்சராக இந்து மதத்தை சேர்ந்த தலித் தலைவர் பொறுப்பேற்றார் என்றும் இன்று அவர் தனது மதம் அடையாளத்தை பாதுகாக்க இந்தியாவிற்கு அகதியாக வந்துவிட்டார் என்றால் எந்த அளவு பாகிஸ்தானில் இந்துக்கள் கொடுமை படுத்த படுகிறார்கள் எனவும் இவர்கள் மீது திமுகவே உனக்கு அக்கறை இல்லையா என குட்டி கதை சொல்லி வெளுத்து வாங்கினார்.

திருவள்ளுவர் மண்ணில் இருந்து கேட்கிறேன் ஏன் நீங்கள் பாகிஸ்தானை ஆதரிக்கிறீர்கள் என்றும், தனக்கே உரிய Why திமுக WHY என்று கூறி வெளுத்து வாங்கிவிட்டார், தமிழகம் வரை தெரிந்த திமுக முகமும் ஸ்டாலின் முகமும் இந்தியாவிற்கு எதிராக செயல்படுவதாக வடமாநில தலைவர்களுக்கும் தெரிந்துவிட்டதா என பலரும் பகிர்ந்து வருகின்றனர் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*