Connect with us

சர்ச்சைகள்

அருணன் வீட்டிற்கு ஒரு முழம் கயருடன் செல்லும் இளைஞர் எல்லாம் பினராயி விஜயனால் வந்தது !

கொரோனா பாதிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி தினமும் அதிர்ச்சியை கொடுத்துகொண்டு இருக்க ஒருபுறம் அதனை சுற்றி அரசியலும் நடந்து கொண்டே இருக்கிறது, அந்த வகையில் இந்த முறை சிக்கி சிதைந்து வருபவர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அருணன்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில், அதற்கான நிவாரண பணியை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன, இந்நிலையில் தமிழகத்தில் உள்ள இடதுசாரிகள் மற்றும் பெரியாரிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்கள் கேரள மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பினராயி விஜயன் சிறந்து செயல்படுவதாகவும்..,

அவரை போன்ற ஒருவர் நாட்டிற்கு பிரதமராகவோ, தமிழக முதல்வராகவோ கிடைக்கமாட்டார்களா என கேள்வி எழுப்பியதுடன் மோடியை கிண்டல் செய்தும் வந்தனர், மேலும் பினராயி விஜயன் 20 ஆயிரம் கோடி கொரோனா பாதிப்பில் இருந்து மீளுவதற்கு நிதி ஒதுக்குவதாகவும் தெரிவித்ததை கொண்டாடி தீர்த்தனர். அதில் மிகவும் குதர்க்கமாக சங்கிகளே என பல பதிவுகளை போட்டு வம்பிழுத்ததில் அருணனும் ஒருவர்.,

Loading...

இந்நிலைதான் நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக கேரளா மாறியிருக்கிறது, அத்துடன் அம்மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போதவில்லை எனவும் அம்மாநிலத்தை சேர்ந்த முக்கிய சமூக ஆர்வலர்கள் தமிழகத்துடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்துவருகின்றனர்.

Loading...

தற்போது அதைவிட முக்கியமாக கேரள மாநிலம் மதுவை அத்தியாவசிய பட்டியலில் சேர்த்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார், மேலும் 20000 கோடி ரூபாய் கொரோனோவிற்கு ஒதுக்குவதாக கூறியவர் எந்த நிதியில் இருந்து ஒதுக்குகிறார் என்று கூறவில்லை இந்நிலையில் தற்போது அருணன் வசமாக சிக்கி சிதைந்து வருகிறார்.

எதை வைத்து மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து வந்தாரோ அது அனைத்து முகத்தில் சாணியை அடித்தது போன்று அவருக்கே திரும்பியுள்ளது, மதுவை அத்தியாவசிய பட்டியலில் சேர்த்த பினராயி விஜயன்தான் உங்களுக்கு சிறந்த முதல்வரா எனவும், 20 ஆயிரம் கோடிகள் எங்கிருந்து ஒதுக்கினார் சொல்லுங்கள் எனவும் ஒரு முழம் கயிறு கொண்டுவருகிறேன் அனுமதியுங்கள் இல்லை நீங்களே தொங்குங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதுவரை பொதுவெளியில் பல பொய்களை அருணன் பரப்பிவருவதாகவும் இதற்கு முன்னர் டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தின் போது இந்துக்கள் மீது குறிவைத்து இறந்தவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள்தான் என கூறியதும் பின்னர் அது பொய் என நிரூபணம் ஆகியதும் குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...

Trending