உடற்பயிற்சியின் போது தலைகீழாக விழுந்த நடிகர் – வெளியான வீடியோ!

உடற்பயிற்சியின் போது தலைகீழாக விழுந்த நடிகர் – வெளியான வீடியோ!

Loading...

நடிகர் அருண் விஜய் தலைகீழாக உடற்பயிற்சி செய்த போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த நிலையில் அது சம்மந்தமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சினிமா நடிகர்களில் பிட்னெஸ் பிரீக்காக இருப்பவர் நடிகர் அருண் விஜய். சமீபகாலமாக சிக்ஸ் பேக்கோடு சுற்றும் அவர் ஊரடங்கு காலத்திலும் உடற்பயிற்சிகள் செய்து தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ காட்சிகளை அவ்வப்போது பதிவேற்றும் அவர் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான வீடியோவை வெளியிட்டுள்ளார்

Loading...

அதில் அவர் தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்ய எதிர்பாராத விதமாக கீழே விழுந்துவிடுகிறார். மேலும் அந்த வீடியோவில் ‘இதுபோல ரிஸ்க்கான உடற்பயிற்சிகளை செய்யும் போதும் கவனமாக இருங்கள். உடற்பயிற்சிக்கு முன்னர் சரியாக இருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். நான் அன்று அதை செய்யவில்லை. அதனால் கீழே விழுந்ததில் எனது முழங்கால் இரண்டிலும் காயம் ஏற்பட்டு வீங்கியது. கடவுள் அருளால் என் தலையில் அடிபடவில்லை. இது எனக்கு பாடம் கற்பித்து விட்டது. இது போன்று யாரும் பயிற்சியாளர் இல்லாமல் உடற்பயிற்சி செய்யாதீர்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*