இந்த ‘து லுக் கனுங்களே என்று பேசமாட்டார்கள் அருள்மொழி பாய்ச்சல்!!

திராவிட கழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி இஸ்லாமியர்கள் மீது குற்றம் சுமத்தும் நபர்களை கண்டித்து சமூகவலைத்தளத்தில் பதிவு ஒன்றிணை வெளியிட்டுள்ளார் அதில் அவர் குறிப்பிட்ட சில சம்பவங்கள் சர்ச்சையை உண்டாக்கியுள்ளன. அவர் குறிப்பிட்டவை பின்வருமாறு :-

Loading...

ஒவ்வொரு மாநிலத்திலும் மார்ச் மாதம் 18 ஆம் தேதிவரை எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்தன. அந்தக் கூட்டங்களில் இருநூறு முதல் இரண்டாயிரம் பேர்வரை கலந்து கொண்டார்கள் . 19, 20 ஆம் தேதி கூட நீதிபதிகள் , வழக்கறிஞர்கள் பலர் நீதிமன்றம் சென்று வந்தோம் .

அன்று அந்த எச்சரிக்கைகளை உண்மை என்று நம்பாதவர்களே அதிகம்.
ஆனால் ஒரே ஒரு நிகழ்வில் டெல்லியில் கூடியவர்களை , அவர்களின் இஸ்லாமிய அடையாளத்தினை மட்டும் முன்னிறுத்தி பரப்பப்படும் அவதூறுகள் மதவெறி நஞ்சேறிய சங்கிகளின் தீவிர செயல்பாட்டை காட்டுகிறது.
இசுலாமியர் என்பதற்காக சொல்லவில்லை . அவர்களிடையே நோய்த்தொற்று இருந்தவர்கள் கலந்திருந்தார்கள் , அதற்காகத்தான் பதறுகிறோம் எனகிற யாரும் அக்கறையுடன் அறிவுரை கூறுவார்களே தவிர, “இந்தத் துலுக்கனுங்களே “ என்று பேச மாட்டார்கள். அடியாள்படை வைத்து “முடிந்தவரை பரப்புங்கள் விடாதீர்கள் “ என்று படைகிளப்பும் வேலையை செய்ய மாட்டார்கள் .

Loading...

இன்றும் பல படிப்பாளிகளும் பணக்காரர்களும் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் மருத்துவமனைக்குப் போக அஞ்சுகிறார்கள். தங்களுக்கு கொரானா பாதிப்பு இருக்கிறது என்று சொல்லிவிடுவார்களோ என்பதைவிட அதன்பிறகு தனிமைப்படுத்திவிட்டால் என்ன நடக்குமோ என்று பயந்துதான் சொல்லாமல் வீட்டில் இருந்து கொள்ள நினைக்கிறார்கள். மத்திய மாநில அரசுகள் நினைத்திருந்தால் பதட்டமின்றி இரண்டு நாட்களில் அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் முகவரிகளைப் பெற்று நேரடியாக சோதித்திருக்க முடியும் . மாறாக என்ன நடக்கிறது என்று பார்க்கிறோம் .

ஊரடங்கு உத்தரவு அறிவிப்பிற்குப் பிறகு தொழுகை நடத்துகிறோம் என்று பள்ளி வாசலிலோ மொட்டை மாடியிலோ கூடுவதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும் . ஏனெனில் அது கலந்து கொள்பவருக்கோ அல்லது அவரது குடும்பத்திற்கோ உயிராபத்தை ஏற்படுத்தும் . இன்னும் பலருக்கும் பரவும் மேலும் பொது ஒழுங்கை குலைப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.

ஊரடங்கு உத்தரவு நாளிலேயே உ.பி யில் இராமர் கோயில் பூசை நடந்ததே , அதில் எவ்வளவு பேர் கலந்துகொண்டார்கள் என்ற செய்தியோ புகைப்படமோ வெளியாகவில்லையே என்று கேட்கிறவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள் . அங்கு பூசைக்கு முன்பு பசுவின் சிறுநீர் தெளிக்கப்பட்டிருக்கும் , அதனால் கொரானா அங்கெல்லாம் வராது என்ற நவீன வேதகால அறிவியல் யோகிக்கு தெரியும் என்று சொன்னாலும் சொல்வார்கள்.

அந்த கிருமி நாசினியான கோமூத்ராவையே கைகழுவும் சானிடைசராக பாட்டில்களில் அடைத்து விநியோகம் செய்யலாமே என்று கேட்டால் “ உங்கள் பகுத்தறிவிற்கு நேரம் காலம் இல்லையா ?” என்று கேட்பார்கள் இந்த இக்கட்டான நிலையிலும் வெறுப்புப் பிரச்சாரத்தை ஒவ்வொரு வாட்சாப் குழுவிலும் பரப்பும் கிருமியாளர்கள்.

மதுரையில் ஒரு தொழிலாளி (கேரளாவில் வேலைசெய்து கொண்டிருந்தவர்).
கொரோனா அறிவிப்பிற்குப்பின் மதுரைக்கு திரும்பி வந்து வெறும் சளி இருமலோடு இருந்திருக்கிறார். அவருக்கும் அவரது தாய்க்கும் கொரோனா இருக்கலாம் என்று அஞ்சிய பக்கத்துவீட்டினர் காவல்துறைக்கும் சுகாதாரத்துறைக்கும் தகவல் கொடுத்தனர். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவர்கள் அறிவித்த பிறகும் அவரது புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பரப்பி கொரோனா தொற்று உள்ளவர் என்று பொய்ச்செய்தியையும் பரப்பியிருக்கிறார்கள் அக்கம்பக்கம் வசிப்பவர்கள் .

அதனால் அவமானப்பட்டு மனமுடைந்த அந்த தொழிலாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் . இந்தக் காட்சியை தொலைக்காட்சியில் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருந்தது .
மன உளைச்சலுக்கு ஆளாகி ரயில்முன் பாய்ந்த தொழிலாளியின் பெயர் முஸ்தபா. அவரது புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பரப்பியவர்கள் யார் என்று தெரியவில்லை ! அதாவது அதற்கான எந்த வழக்கும் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டதா எனது தெரியவில்லை.

ஆனால் தொடர்ந்து ஊடகங்களைப் பார்த்தால் , அந்த அடையாளம் காணப்படாத ! சிலர் செய்த வேலையைத்தான் சங்கிகளும் , சில அரசு அதிகாரிகளும் , ஊடகங்களும் கொரோனா Breaking News என்ற பெயரில் செய்து கொண்டிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அருள்மொழி கருத்திற்கு பல தரப்பிலும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன, டெல்லியில் நடைபெற்ற கலவரத்தின் போது இந்துத்துவ தீவிரவாதிகள், வன்முறையாளர்கள் என குற்றம் சுமத்திய நபர்கள் இப்போது நோயிக்கு மதம் இல்லை என பாடம் எடுக்கிறார்கள் என்றும், சுகாதார பணியாளர்கள் வாணியம்பாடி ஆம்பூர் பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகளால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவமும் மத்திய பிரதேசத்தில் மருத்துவர்கள் மீது இஸ்லாமியர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவங்கள் இவர்கள் கண்களுக்கு படவில்லையா எனவும் கண்டித்து வருகின்றனர்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*