சுயமரியாதை பெரியார் மண்ணில் இருந்து வந்திருக்கிறேன் அப்போ வெளிய போங்க விரட்டி விட்ட அர்னாப் பாதியில் வெளியேறிய பரிதாபம் வீடியோ இணைப்பு

Loading...

டெல்லி.,

காஷ்மீர் மாநிலம் இரண்டாக ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது அத்துடன் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தும் திரும்ப பெறப்பட்டது.

Loading...

இதுகுறித்து பல்வேறு உலக நாடுகளும் இந்தியாவின் பக்கம் ஆதரவாக நின்றன, ஐக்கிய நாடுகள் சபையும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடமுடியாது என்று விலகிக்கொண்டது. ஆனால் இரண்டு தரப்பினர் மட்டுமே தற்போது காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டதை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். ஒன்று பாகிஸ்தான் மற்றொரு தரப்பினர் காங்கிரஸ் மற்றும் திமுக.

இந்நிலையில் ஏன் திமுக காங்கிரஸ் உள்நாட்டு நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவினை எதிர்க்கிறது என்ற விவாதத்தை முன்வைத்து ரிபப்ளிக் ஆங்கில தொலைக்காட்சியின் அர்னாப் கோசுவாமி திமுக செய்தி தொடர்பாளர் சரவணனிடம் கேள்வி எழுப்பினார். விவாதத்தின் இடையில் திமுகவை சேர்ந்த செய்தி தொடர்பாளர் சரவணன் காஷ்மீர் இந்தியாவின் பகுதி இல்லை என்று குறிப்பிட்டார்.

இதனால் பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க அர்னாப் இந்திய அரசியல் கட்சிகள் பலருக்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும் நாட்டு மக்கள் நாடு என்று வரும்போது ஒற்றுமையாக இருப்பது நல்லது என்றும் உங்கள் கருத்தை திரும்ப பெறுங்கள் என்று அறிவுறுத்தினார்.

ஆனால் சரவணன் நாங்கள் பெரியார் மண்ணில் இருந்து வந்திருக்கிறோம், கருத்து சுதந்திரம் என்று பேச திமுக தலைவர் ஸ்டாலினை நோக்கி உங்கள் கட்சியினர் அரசியல் செய்வதாக நாட்டை பிளவு படுத்துகிறார்கள் என்று சொல்ல சரவணன் முனங்க வெளியேறுங்கள் என்று விரட்டிவிட்டார். இது இந்திய அளவில் திமுகவின் மீது எதிர்ப்பினை தேடி தந்துள்ளது.

ஆங்கில ஊடகமாக இல்லாமல் இதுவே தமிழக ஊடகங்களாக இருந்திருந்தால் நாட்டிற்கு எதிராக யார் கருத்து சொன்னாலும் அமைதியாக கேட்டு கொண்டு இருந்திருக்கும் என்றும் நாட்டின் மீது பற்றுக்கொண்ட அர்னாப் கோசுவாமிக்கு தமிழர்கள் சார்பில் நன்றி என்று ட்விட்டரில் பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

பெரியார் பெயரை தமிழகத்தில் சொன்னால் தெரிய வாய்ப்புண்டு டெல்லியில் சொன்னால் விரட்டத்தான் செய்வார்கள் என்று சமூகவலைத்தளங்களில் மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*