Connect with us

#24 Exclusive

எனக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுங்கள் அர்னாபிடம் கண்ணீர் விட்டு கதறிய பாகிஸ்தானியர், பாகிஸ்தான் ஆதரவாளர்களுக்கு செருப்படி !!

பாகிஸ்தானின் மூன்றாவது (தேசிய அளவில்) பெரிய அரசியல் எதிர்க்கட்சியான முஹாஜிர் குவாமி மூவ்மெண்ட் (தற்போது இது Muttahida Quami Movement என்றும் கூறப்படுகிறது) . கராச்சியை தலைமையிடமாக கொண்ட இக்கட்சியை தோற்றுவித்தவர் அல்தாஃப் ஹுஸைன் என்பவர். 1947 இல் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து பாகிஸ்தானுக்கு குடியேறிய மக்களை அங்குள்ள பஞ்சாபியர்கள் கொஞ்சம் ஏளனமாக முஹாஜிர் என்றழைப்பார்கள். முஹாஜிர் என்றால் குடிபெயர்ந்தவர் அல்லது வந்தேறி என்று பொருள்படும். ஆரம்பம் முதலே இந்த முஹாஜிர்களை பாகிஸ்தானியராகவோ அல்லது இஸ்லாமியராகவோ கூட அங்கிருந்த பஞ்சாபியர்கள் அங்கீகரிக்கவில்லை. பாக்கிஸ்தானிய ராணுவமும் அதன் உளவுத்துறையான ஐஎஸ்ஐ யும் இந்த முஹாஜிர்களை நான்காம் தர குடிமக்களாக தான் நடத்திவந்துள்ளனர்.

முஹாஜிர்களின் நலன் காக்க தொடங்கப்பட்ட முஹாஜிர் குவாமி மூவ்மெண்ட் கட்சிக்கு அனைத்து விதத்திலும் ராணுவம் தொந்திரவு கொடுத்து வந்துள்ளது. இக்கட்சியை சேர்ந்த ஏறக்குறைய 25000 தொண்டர்களை பாகிஸ்தானிய ராணுவம் கொன்று குவித்துவிட்டதாக இக்கட்சியின் தலைவர் அல்தாஃப் ஹுஸைன் கூறுகிறார்..

1992 இல் பாகிஸ்தானிய ராணுவத்திடமிருந்து தப்பியோடி இங்கிலாந்தில் வசித்து வருகிறார். ரிபபப்லிக் டிவியின் ஆர்னாப் கோஸ்வாமி இவரை நவம்பர் 19 2019 அன்று நேரலையாக எடுத்த பேட்டியின் போது மனுஷன் ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கும் மேலாக டிவியில் கண்ணீர்விட்டு கதறினார் . அவர் கூறிய சில பாயிண்டுகள்.
(1) நான் இந்தியாவிடம் அடைக்கலம் புக விரும்புகிறேன். இறுதி காலத்தை எனது முன்னோர்களின் தேசமான இந்தியாவில் வாழ விரும்புகிறேன் என்று கூறி சாரே ஜஹான் ஸே அச்சா ..இந்துஸ்தான் ஹமாரா என்ற பாடலை அழுதுக்கொண்டே பாடினார்.
(2) பாகிஸ்தானிகளோடு ஒப்பிடுகையில் இந்திய முஸ்லீம்கள் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர்கள். மிகவும் பாதுகாப்பான இடத்தில கவுரமாக வாழுகிறார்கள்.(D)
.
(3) இந்தியர்கள் மிகவும் நாகரீகமானவர்கள்.. பண்பாடு மிகுந்தவர்கள்.(4) பாகிஸ்தான் என்ற நாடு உருவாகியிருக்கவே கூடாது. இந்திய துணைக்கண்டத்தை இரு நாடுகளாக பிரித்தது மிகவும் தவறு.
(5) காஷ்மீர் முழுவதும் இந்தியாவிற்கு தான் சொந்தம். பாகிஸ்தானோடு சேர்ந்தால் காஷ்மீரும் குப்பை பிரதேசமாக ஆகிவிடும் .
(6) இந்திய மக்களின் அதிர்ஷ்டத்தினால் மோடி போன்றோரை பிரதமராக அடைந்துள்ளனர் எனது முன்னோர்களின் பூமியான இந்தியாவில் நான் வாழ விரும்புகிறேன். கைகூப்பி வேண்டுகிறேன் ..மோடி அவர்கள் பெரிய மனது பண்ணி என்னை அடைக்கலமாக ஏற்றுக்கொள்ளவேண்டும்

Loading...

(7) என்னை நம்பி என் பின்னால் அணிவகுத்ததால் எனது கட்சி தொண்டர்கள் 25000 பேரை பாகிஸ்தானிய ராணுவம் கொன்று குவித்துள்ளது. உலக வல்லரசுகளுக்கு அவர்களின் படுகொலைகளைப்பற்றி எவ்வித அக்கறையும் இல்லை . நான் மேன்மேலும் என் மக்களை பலியிட விரும்பவில்லை
(8) சிந்திகள் / பலூச்சிகள் / காஷ்மீரிகள் / பஸ்தூன்கள் என எந்த சிறுபான்மையினரையும் பாகிஸ்தானிய ராணுவம் அந்நாட்டு குடிமக்களாக ஒப்புக்கொள்ளுவதில்லை. பாகிஸ்தானிலிருந்த இந்துக்கள் சீக்கியர்கள் போன்றோர் மதமாற்றத்திற்கு உள்ளாகின்றனர்.
(9) பாகிஸ்தானிய ராணுவம் ஊழல் மிகுந்தது. கொடூரமானது . நாட்டை சுரண்டுகிறது

Loading...

(10) இந்தியா ஒரு உன்னதமான தேசம். இந்திய துணைக்கண்டத்தை பிரித்தது தவறு. இந்தியாவுடன் இணைந்திருந்தால் நாங்களும் வளமாக இருந்திருப்போம்.இவ்வாறு ஆங்கிலத்திலும் இந்தியிலும் உருதுவிலுமாக மனிதர் புலம்பி தீர்த்துவிட்டார்.
credit – Ilamurugan Kolandan

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் இருந்துகொண்டு யாரெல்லாம் பாகிஸ்தான் நாட்டிற்கு குரல் கொடுத்தார்களோ அவர்களுக்கு நிச்சயம் செருப்படியாகதான் இருந்திருக்கும், இந்தியன் என்ற எண்ணமில்லாதவர்கள் நிச்சயம் இதை பார்த்தாவது திருந்த வேண்டும் என கூறிவருகின்றனர்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending