Connect with us

#24 Exclusive

அர்னாப் கோசுவாமியுடன் விமானத்தில் மோதலில் ஈடுபட்ட நடிகர் !குவியும் கண்டனம்

பிரபல பத்திரிகையாளர் அர்னாப் கோசுவாமியை காமெடி நடிகர் ஒருவர் விமானதிற்குள் வார்த்தை மோதலில் ஈடுபட்டு சண்டைக்கு தூண்டிய சம்பவம் நேற்று நடந்துள்ளது, இதில் அந்த நகைச்சுவை நடிகர் அர்னாப் நீங்கள் ஒரு கோழையா அல்லது தேசியவாதியா என மக்கள் பார்க்க வேண்டும் வாருங்கள் என கூறி அழைப்பு விடுத்தார்.

டெல்லி JNU பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுவது பலருக்கும் தெரிந்திருக்கும் அதுபோல் சமீபத்தில் கல்லூரிக்குள் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மிக பெரிய அளவில் ஊடகங்களில் வெளிவந்தன, ஆனால் இதுவரை இது குறித்து இரண்டு தரப்பும் குற்றம் சாட்டி வரும் நிலையில் விசாரணை நடைபெறுகிறது.

இதில் கல்லூரிக்குள் என்ன நடக்கிறது என செய்தி சேகரிக்க சென்ற அர்னாப் கோஷ்வாமியின் REPUBLIC ஊடகத்தை அங்குள்ள சிலர் கல்லூரிக்கு உள்ளே செய்தி சேகரிக்கவிடாமல் தடுத்தார்கள், மேலும் நாட்டிற்கு எதிரான கோஷங்கள் தொடர்ந்து JNU வில் எழுப்ப படுவதாகவும் இது நாட்டிற்கு நல்லது இல்லை எனவும் அதனை நாட்டு மக்களிடம் கொண்டு செல்வோம் என அர்னாப் கூறியிருந்தார். அதன் எதிரொலியாக வட கிழக்கு மாநிலங்களை இந்தியாவில் இருந்து பிரிக்கவேண்டும் என்று கூறிய JNU மாணவ தலைவன் பேச்சை வெளியிட்டனர்.

Loading...
Comedian kunal kamra

தொடர்ந்து அங்கு நாட்டிற்கு எதிராக நடக்கும் விவாதங்களை வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றனர், இதனால் இடதுசாரிய அமைப்புகள் அதன் மாணவ சங்கங்கள் அர்னாப் மீது கோவத்தில் இருந்து வருவதாக கூறப்பட்டது, இந்நிலையில்தான் அர்னாப் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த போது தீவிர இடது சரியான குணால் கர்மா என்பவர் அரணாப்பை பார்த்து நீங்கள் கோழையா தேசியவாதியா என பார்த்துவிடலாம் என சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தி வம்பிழுத்தார்.

Loading...

அதனை நேரலையாக ஒளிபரப்பி மகிழ்ச்சி அடைந்தார், ஆனால் அர்னாப் குணால் பேச்சினை கண்டு கொள்ளாமல் விமானத்தில் ஹெட்செட் பயன்படுத்தி அமைதியாக இருந்தார், தொடர்ந்து அர்னாப் மீதான குணால் என்பவர் தாக்குதலுக்கு பத்திரிகையாளர்கள் வாய்திறக்காமல் அமைதிகாத்து வருகின்றனர், மேலும் இந்தியாவின் ஒற்றுமையை காப்பற்ற நினைப்பவர்கள் மீது தாக்குதல்கள் அரங்கேறுவது தொடர்கதையாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

நாளை மற்றொரு தரப்பினரும் இதே போல் அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது விமானத்திற்குள் மோதலில் ஈடுபட்டால் என்ன நடக்கும் என அவர்களும் எதிர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

©TNNEWS24

Loading...

Trending