Connect with us

#24 Exclusive

ஆப்பம் மாவு இப்படி அரைத்து பாருங்கள்!!!!

முதலில் ஆப்பமாவிற்கு தேவையான பொருள்கள் :பச்சரிசி இரண்டு கப், பழையசாதம்அரைகப், தேங்காய் அரைமூடி, தேங்காய் தண்ணி ஒரு டம்ளர், உப்பு, பேக்கிங்சோடா

முதலில் பச்சரிசியை காலையில் ஊறவைக்கவேண்டும். மாலையில்தான் அரைக்கவேண்டும். மாவு அரைக்கும் பொழுது அதில் பழையசாதம், துருவியதேங்காய், தேங்காய் தண்ணி ஊற்றி அரைக்கவேண்டும். தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவேண்டும். அரைத்த பிறகு மாவை மூடி இரவு முழுவதும் வைக்கவேண்டும். பிரிட்ஜ்யில் வைக்க கூடாது. வெளியில்தான் வைக்கவேண்டும். மாவு நன்கு புளிதால்தான் நல்லா இருக்கும்.

பிறகு மறுநாள் காலை மாவை எடுத்து பார்த்தால் புளித்து பொங்கிவரும். அப்பொழுது அதில் உப்பு, அரைஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலக்கி ஆப்பச்சட்டியில் மாவை ஊற்றி எடுத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending