Connect with us

#24 Exclusive

ஆந்திராவில் அரசியல் மாற்றம் ஆரம்பம்- ! தென் இந்தியாவில் பாஜகவின் அடுத்த நகர்வு !

Published

on

நடிகர் பவன் கல்யாண் பாஜக செயல் தலைவர் ஜெ பி நட்டா சந்திப்பு குறித்தும் அதன் பின்னணி என்னவென்பது குறித்து திரு விஜயகுமார் தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார், அது என்னவென்று பின்வருமாறு :

ஆந்திராவில் ஜன சேனா கட்சியின் தலைவர்
பவன் கல்யாண் டெல்லி சென்று பிஜேபி செயல் தலைவர் ஜே பி நட்டா அவர்களை சந்தித்து பிஜேபியுடன் இணைந்து அரசியல் செய்ய விரும்புவதாக அறிவித்து இருக்கிறார்.இது ஆரம்பம் தான் கூடிய விரைவில் பவன்கல்யாண் தன்னுடைய கட்சியை பிஜேபியோடு இணைத்து பிஜேபிக்கு மிகப்பெரிய அளவில் அடித்தளத்தை உருவாக்கி தருவார் என்று கூறப்படுகிறது .

டெல்லிக்கு சென்று பிஜேபி தலைவர்களை
சந்தித்து வந்த பிறகு பவன் கல்யாண் தன்னுடைய கட்சியின் அமைப்புகளை பிஜேபி யோடு இணைந்து பணியாற்றுங்கள் என்று.அறிவித்து இருக்கிறார்.
இந்த அடித்தளம் மிகப்பெரிய அளவில் உருவாகி வரும் பொழுது அவருடைய அண்ணன் நடிகர் சிரஞ்சீவி பிஜேபியில் வந்து ஐக்கியமாகி பிஜேபியை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்வார்

Loading...

சிரஞ்சீவி பவன் கல்யாண் இவர்களுக்கு நடிகர்கள் என்கிற அளவில் இருக்கும் ஆதரவை விட அவர்கள் சார்ந்த காபூ இன மக்களின் ஆதரவு தான் அதிகமாக இருக்கிறது. ஆந்திர மக்கள் தொகையில் ரெட்டி நாயுடுக்களைவிட அதிகளவில் இருப்பவர்கள் காபூக்கள் தான்.
ஆந்திராவில் சுமார் 15 சதவீத அளவில் இருக்கும் காபூக்கள் இன்று வரை மிகப்பெரிய அளவில் அரசியல் அதிகாரம் பெற்று விடவில்லை . அதனால் அவர்களை முன் வைத்து பிஜேபி ஆந்திராவில் தன்னுடைய வளர்ச்சி யை எடுத்து செல்ல விரும்புகிறது.

Loading...

காபூக்களின் ஆதரவை வைத்தே தனிக்கட்சி
ஆரம்பித்த சிரஞ்சீவி 2009 சட்டமன்ற தேர்தலில் 17 சதவீத வாக்குகளையும் 18 எம்எல்ஏக்களையும் பெற்று இருந்தார். இதனால் சிரஞ்சீவி பவன் கல்யாண் பிஜேபிக்கு வரும் பொழுது பிஜேபிக்கு மிகப்பெரிய ஆதரவு தளம் அமைந்து விடும்.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் காலி என்பதால் சிரஞ்சீவி பிஜேபிக்கு வந்த பிறகு ஜெகன் மோகன் ரெட்டிக்கு மாற்றாக சிரஞ்சீவியே களத்தில் முன்னிலையில் இருப்பார்.

எப்படியும் 2024 சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்குள் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சொத்து குவிப்பு வழக்கில் நிச்சயமாக தண்டனை கிடைத்து உள்ளே போய் விடுவார். இதனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் வலுவிழுந்து விடும் என்பதால் 2024 தேர்த லில் பிஜேபி சிரஞ்சீவிவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி ஆந்திராவை கைப்பற்றி
விடும்.

கர்நாடகாவை அடுத்து தென்னிந்தியாவில் பிஜேபி ஆட்சியை பிடிக்க இருக்கும் அடுத்த
மாநிலம் ஆந்திரா தான் இதற்கு காரணம்
என்னவென்றால் இப்போதைய ஆந்திர
மாநில பிஜேபி பொறுப்பாளர் யார் என்றால்
திரிபுராவில் 25 ஆண்டு கால இடதுசாரி ஆட்சியை வீழ்த்தி பிஜேபி ஆட்சிக்கு கொண்டு வந்த சுனில் தியோடர் தான். இவ்வாறு விஜயகுமார் அவர்கள் தனது அரசியல் கணிப்பினை தெரிவித்துள்ளார்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending