ஒரு EXIT POLL டெல்லியில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று கூறுகிறது மாலை 3 மணிக்கு மேல்தான் ட்விஸ்ட் ஆரம்பமாம் !

அனைத்து எக்சிட் போல்களும் டெல்லியில்
பாஜக மண்ணை கவ்வும் என்று கூறி வரும் நிலையில் ஒரே ஒரு எக்சிட் போல் பாஜக வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளது ANV நியூஸ் என்கிற சேனல் தங்களுடைய கணிப்பு வாக்குப்பதிவு முடிந்த பிறகு கிடைத்த டேட்டா படி என்கிறது. அதாவது மற்ற நிறுவனங்கள் மாலை 3 மணிக்கு முன்பு எடுத்ததும் இந்நிறுவனம் வாக்கு பதிவு முடிந்த பிறகு எடுத்ததாக கூறியுள்ளது.

Loading...

ANV நியூஸ் எக்சிட் போல் படி பாஜகவிற்கு
33-38 தொகுதிகளும் ஆம் ஆத்மிக்கு 20-25
தொகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு 03-08
தொகுதிகளும் கிடைக்கும் என்று கூறுகிறது . அதாவது பாஜக முன்னிலை பெறும் என்று கூறி இருக்கிறது. ஆச்சரியம் அளிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சிக்கு 3-8 தொகுதிகள் கிடை க்கும் என்று கூறியிருக்கிறது.

ஒரு வேளை காங்கிரஸ் கட்சிக்கு 3-8 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றால் அதனுடைய வாக்கு சதவீதம் நிச்சயமாக 12-15 சதவீதம் வரை இருக்க முடியும். காங்கிரஸ் வாக்கு சதவீதம் 15 சதவீதம் வரை இருந்தால் ஆம் ஆத்மியினால் வெற்றி பெறவே முடியாது.

Loading...

டெல்லியில் மொத்த வாக்காளர்கள் 1,கோடியே 47 லட்சமாகும். இதில் முஸ்லிம் வாக்காளர்கள் 18 லட்சமாகும். இப்பொழுது பதிவாகிஉள்ள வாக்குகள் சுமார் 62 சதவீதமாகும். அதாவது சுமார் 91 லட்சம் வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
ஓட்டுப்பதிவு ஆரம்பித்த உடனே அது மந்தமாகத்தான் இருந்தது. 3 மணி வரை 30 சதவீதவாக்குகள் தான் பதிவாகி இருந்தது. இந்த 30 சதவீத வாக்குகளில் பெரும்பாலான வாக்குகள் முஸ்லிம் வாக்குகள் தான். ஏனென்றால் முஸ்லிம்கள் தான் பாஜக மீது எப்போதும் கோபத்தில் இருப்பவர்கள்

அதனால் அவர்கள் ஆரம்பத்திலேயே ஆர்வத்துடன் பாஜகவிற்கு எதிராக வாக்களித்தார்கள். அவர்கள் கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தவர்கள் இம் முறை ஆம் ஆத்மிக்கு வாக்களித்து இருக்க கூடும் என்று உறுதியாக நம்பலாம். இருந்தாலும் முஸ்லிம் வாக்குகள் முழு அளவில் ஆம் ஆத்மிக்குதான் கிடைத்து இருக்கும் என்று உறுதியாக கூற முடியாது. அது ஆம்ஆத்மி 70 காங்கிரஸ் 30 என்று பிரிந்து இரு க்கலாம்.

அல்லது ஆம் ஆத்மி 60 காங்கிரஸ் 40
என்றும் பிரிந்து இருக்கலாம். எதுவாக இருந்தாலும் ஆம்ஆத்மிக்கு அதிகளவில் முஸ்லிம்கள் ஓட்டு போட்டு இருப்பார்கள்
காலை 8-3 மணி வரை நடைபெற்ற 30 சதவீத வாக்குப்பதிவுக்கும் அடுத்து 3-6 வரை நடை
பெற்ற 30 சதவீத வாக்குப்பதிவுக்கும் உள்ள
வித்தியாசம் என்னவென்றால் முதல் 30 சதவீத வாக்குப்பதிவு முஸ்லிம்கள் அதிகமுள்ள தொகுதிகளின் மூலம் கிடைத்துள்ளது.

டெல்லியில் 5 சட்டமன்ற தொகுதிகளில் 50
சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கிறார்கள்.
10 தொகுதிகளில் 30-50 சதவீதம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இன்னும் 5 தொகுதிகளில் சுமார் 20 சதவீத முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக 20 சட்டமன்ற தொகுதிகளில் முஸ்லிம்களின் ஆதிக்கம் இருக்கிறது.

இங்கு தான் காலை 8-3 மணி வரை வாக்குப்ப திவு அதிகளவில் இருந்தது.இதே மாதிரி தான்.2019 லோக்சபா தேர்தலிலும் இங்கு முஸ்லிம்களின் வாக்குப்பதிவு தான் அதிகமாக இருந்தது. இருந்தாலும் இதை இந்துக்களின் ஓட்டுக்கள் மூலமாக ஓவர்டேக் செய்து பாஜக 7தொகுதிகளிலும் வெற்றி பெற்றது..அடுத்த 30 சதவீத வாக்குகள் இந்துக்கள் அதிகளவில் உள்ள தொகுதிகளின் மூலமாக கி டைத்து இருக்கிறது. இந்த கடைசி கட்டத்தில் பாஜக தன்னுடைய தொண்டர் களை வாக்களிக்க வைத்து இருக்கலாம்.

இந்த கடைசி நேர வாக்குப்பதிவு பாஜகவிற்கு சாதகமாக இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் ஆம் ஆத்மி 50+ தொகுதிகளில் வெற்றி
பெற வாய்ப்பே கிடையாது என்கிறது கணிப்பு , 8-3மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு மூலமாக அதாவது முஸ்லிம்கள் அதிகமாக
உள்ள தொகுதிகளின் மூலமாக எடுக்கப்பட்ட
கருத்துக்கணிப்பு படி ஆம் ஆத்மி முன்னிலை
பெற்று இருக்கிறது.

அதற்கு அடுத்த 3 மணி
நேர வாக்குப்பதிவு எக்சிட் போல்களின் கணக்கில் இல்லை. ஒரு வேளை அதுவே கேம் சேஞ்சராக இருக்கலாம். எனவே அமித்ஷா கூறிய படி தேர்தல் முடிவு அனைவருக்கும் ஷாக்களிக்கும் படி இருக்கும் என்று கூறியது போல அது எக்சிட் போ ல்களுக்கும் ஷாக்கடிக்கும் என்று ANV கூறியிருக்கிறது . எனவே நாளை காலை என்ன நடக்கும் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3912 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*