பசுவின் உணவில் வெடிமருந்து வைத்துக் கொடுத்து கொடூரம்! அதிகரிக்கும் விலங்குகள் மீதான அத்துமீறல்கள்!

பசுவின் உணவில் வெடிமருந்து வைத்துக் கொடுத்து கொடூரம்! அதிகரிக்கும் விலங்குகள் மீதான அத்துமீறல்கள்!

Loading...

இமாச்சல பிரதேசத்தில் உள்ள பசு ஒன்றுக்கு யாரோ மர்ம நபர் கோதுமை மாவில் வெடிமருந்தைக் கலந்து கொடுத்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டம் ஜன்துட்டா பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தான் வளர்க்கும் பசுவின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் அந்த பசுவின் வாய்ப்பகுதி கடுமையாக சேதம் அடைந்த நிலையில் உள்ளது. கர்ப்பிணியான அந்த பசுவுக்கு கோதுமை மாவு உருண்டைக்குள் யாரோ வெடி வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. அதை சாப்பிட்ட போது பசுவின் வாயிலேயே வெடித்து வாய்ப்பகுதி சிதைந்துள்ளது.

Loading...

சில தினங்களுக்கு முன்னர்தான் இது போல கேரளாவில் கர்ப்பமாக இருக்கும் யானை ஒன்று அன்னாசி பழத்தில் வெடிவைத்து கொடுக்கப்பட்டு, இதே போன்ற சம்பவம் நடந்தது. அந்த யானையும் காப்பாற்ற பட முடியாமல் பலியானது. இது சம்மந்தமாக சமூகவலைதளங்களில் மிகப்பெரிய அளவுக்கு கண்டனங்கள் எழுந்தன. இது சம்மந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த சம்பவத்தின் தாக்கம் குறைவதற்குள் மீண்டும் அதே போல ஒரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக நம் நாட்டில் விலங்குகள் மீதான கொடூரங்கள் அதிகமாகியுள்ளன.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3886 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*