Connect with us

#24 Exclusive

கச்சத்தீவு இந்தியாவின் பகுதியாக இருந்தது இல்லை என்று சொன்ன பா.சிதம்பரத்திற்கு, TN நியூஸ் 24 யின் பதில்கள்.

Published

on

தந்தி டிவி விவாதம் ஒன்றில், பா.சிதம்பரம் என்ன சொலிக்கிறார் என்றால், கச்சத்தீவு இந்தியாவின் பகுதி கிடையாது அது இந்தியா இலங்கை ஆகிய இருநாடுகளும் சொந்தமாக இருந்தது, அதை அவர்கள் எடுத்துக்கொண்டார்கள், அதற்கு அப்போதைய இந்திய அரசும் ஒப்புக்கொண்டது என்று கூறினார். இதற்கு பல தரப்பில் இருந்து அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகினறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அரசாங்கத்தின் முதன்மையான பணி என்னவென்றால் அதன் ஆளுகை எல்லைக்குள் அந்த நாட்டு மக்களின் உயிர்க்கும், உடைமைக்கும் பிறநாட்டின் அச்சுருத்துதலிருந்து காத்து, அவர்களை பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழ வழிசெய்வதுதான். அந்த விசயத்தில் கடந்த கால காங்கிரஸ் அரசு தோற்றுவிட்டது . வடக்கே அருணாச்சலப்பிரதேசம், காஷ்மீர் மக்களையும், தெற்கில் தமிழ் மக்களையும் நிம்மதியில்லாமல் வாழச்செய்ததில் காங்கிரஸ் அரசின் கையாலாகாத்தனம் உலக அரங்கில் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தியது .இன்றைக்கு பரபரப்பாய் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பிரச்சனையான பல விசயங்களில் ஒன்றுதான் இந்த கச்சத்தீவு பிரச்சனை. ஏற்கனவே பல யுகங்களாக கடல் கொந்தளிப்பு, புயல் போன்ற இயற்கை சீற்றங்களோடு போராடிவரும் தமிழக மீனவர்களுக்கு காங்கிரஸ் அரசாங்கம் தந்த மற்றுமொறு மரண அடித்தான் இந்த கச்சதீவு பிரச்சனை.

“எமது அண்டை நாடான இலங்கையுடன் கச்சா தீவு குறித்து தேசிய கௌரவப் பிரச்சினை எதுவும் சம்பந்தப்படவில்லை” என நேரு பாராளுமன்றத்தில் சொன்னார்.தமிழக மீனவர் நலன் குறித்து அக்கறையற்ற காங்கிரஸ் அரசின் தடித்தனமான அணுகுமுறையின் ஆரம்ப வார்த்தைகள் இப்படித்தான் துவங்கின. அதன்பின் அவரது மகள் இந்திராவுக்கும் இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவிற்கும் இடையே 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதி செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி கச்ச தீவினை யாரிடமும் கேட்காமல் இலங்கைக்கு தாரை வார்த்தார் இந்திரா….இன்று காஸ்மீர் விவகாரத்தில் ஜனநாயகம் குறித்து வாய்கிழிய வசனம் பேசும் திமுக காங்கிரஸ் கட்சியினர் அன்று நவ துவாரங்களையும் மூடிக்கொண்டிருந்தனர். திமுக-காங்கிரஸ் கூட்டணி அன்று செய்த துரோகத்தால் அன்று முதல் இன்று வரை தமிழக மீனவர்கள் கடலின் மீதான தங்களின் உரிமையை இழந்தது குறித்தோ உயிர்வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலான ஒன்றாக கச்சத்தீவும் அதை அண்டிய பகுதிகளும் மாறிவிட்டது.

ஆயிரக்கணக்கில் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, சுட்டுக்கொள்ளப்பட்டு, சித்தரவதை செய்யப்படும் போது ஆட்சி அதிகாரத்தில் அமைதியாக அமர்ந்திருந்த ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் திமுக உறுப்பினர்கள் இன்று மீனவர் படுகொலைகள் தடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு சொந்தமில்லை என்று கூறுவது எதற்க்காக? மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் மீனவர்களின் படுகொலை குறைந்திருக்கிறது… மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டாலும் சிறுது காலத்திலேயே விடுவிக்கப்படுகின்றனர். அது சிதம்பரம் அவர்களுக்கு பிடிக்கவில்லையா ? ஆளும்கட்சிக்கு நெருக்கடி கொடுக்க இலங்கை அரசை தூண்டுகிறாரா ? இப்படி பல கேள்விகள் நமக்குள் எழுகிறது …

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share