அங்க லட்சம் பேரு வந்துட்டு எப்படி போறான் நம்ம ஆளு இப்படி அசிங்கப்படுத்திடானே திமுகவினர் வேதனை !

அங்க லட்சம் பேரு வந்துட்டு எப்படி போறான் நம்ம ஆளு இப்படி அசிங்கப்படுத்திடானே   திமுகவினர் வேதனை !

நேற்று மதுரையில் நடைபெற்ற திமுக மாநாடு மற்றும் இன்று குஜராத் மாவட்டம் அகமதாபாத் பகுதியில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் பொதுக்கூட்டம் இரண்டையும் ஒப்பிட்டு சமூகவலைத்தளங்களில் பரவும் கிண்டலால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று மதுரையில் முன்னாள் அமைச்சர் இராஜா கண்ணப்பன் திமுகவில் தனது ஆதரவாளர்களுடன் இணையும் விழா நடைபெற்றது, இதில் திமுக தலைவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார், தற்போது திமுகவில் இணைந்துள்ள இராஜா கண்ணப்பன் ஒரு காலத்தில் மிகவும் செல்வாக்கு மிகுந்த நபராக தென் மாவட்டங்களில் வலம்வந்தவர்.

யாதவ சமூகத்தை சேர்ந்த அவருக்கு சொந்த சமூகத்திலும் நல்ல செல்வாக்கு இருந்தது, ஆனால் தொடர்ந்து கட்சி மாறி மாறி தனது செல்வாக்கை இழந்தார் எனினும் அப்போது கூட அவருக்கு என்று சொந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆதரவு இருந்தது, ஆனால் திமுகவில் இணைத்ததால் இந்து நம்பிக்கை கொண்ட யாதவ சமுதாயத்தை சேர்ந்த பலரே அவரை விமர்சனம் செய்துள்ளனர்.

Loading...

பகவத் கீதை முதல் கிருஷ்ணர் வரை அனைத்தையும் இழிவாக விமர்சனம் செய்த திமுகவினர் உள்ள கட்சியில் சென்று சேரலாமா எனவும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர், ஆனால் நீண்ட நாட்களாக ஆட்சி அதிகாரம் எதிலும் இல்லாததால் வேறு வழியின்றி கண்ணப்பன் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

Loading...

அவர் லட்சம் நபர்களை திரட்ட வேண்டும் என்பதற்காக பெரும் திரளான பணத்தை செலவு செய்து மதுரை நோக்கி பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களை திரட்டி மதுரையில் மாநாடு ஏற்பாடு செய்திருந்தார், ஆனால் மாநாடு நடைபெற்ற புகைப்படங்கள் இணையத்தில் பரவியதோ இல்லையோ, மாநாட்டில் போடப்பட்ட வாழைமரத்தில் இருந்த வாழைத்தாரை திமுகவினர் சண்டை போட்டு பறித்து சென்ற புகைப்படங்கள் இணையத்தில் பரவி பலத்த கிண்டலுக்கு உள்ளாகி வருகின்றன.

அகமதாபாத்தில் லட்சம் நபர்கள் பங்கேற்ற நமஸ்தே டிரம்ப்பில் கலந்து கொண்டவர்கள் எவ்வாறு கலைந்து சென்றுருக்கிறார்கள் ஆனால் நமது ஆட்கள் வாழைத்தாரை பறித்து மாட்டி கொண்டார்களே என்ற வேதனையில் ஆழ்ந்து உள்ளனராம் திமுகவினர்.

©TNNEWS24

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *