Connect with us

#24 Exclusive

மேலும் ஒரு அதிமுக எம் எல் ஏ தகுதி நீக்கம் OPS – ஈ பி எஸ் அதிரடி முடிவு !

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், குறிப்பாக உலக வரலாற்றிலேயே வெளிநாட்டை சேர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்கவேண்டும் என்று மிக பெரிய அளவில் போராட்டம் நடப்பது இந்தியாவில்தான் என்றும், முஸ்லீம் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு இந்தியர்களுக்கு பலன் அளிக்கும் திட்டத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் நாளை (டிச -23) திமுக சார்பில் மிக பெரிய அளவில் சென்னையில் போராட்டம் நடத்த இருப்பதாக அழைப்பு விடுத்துள்ளது, இதற்கென தமிழகத்தை சேர்ந்த திமுகவுடன் இணக்கமாக செல்லும் அரசியல் கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது, அதன் படி அஅதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக எம் எல் ஏ தமிமுன் அன்சாரிக்கும் திமுக அழைப்பு விடுத்திருந்தது,

அதனை ஏற்று தமிமுன் அன்சாரி திமுக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்திருக்கிறார், அதிமுக குடியுரிமை சட்டத்தை ஆதரித்து வாக்களித்த நிலையில் அதிமுக வேட்பாளர் கட்சி விரோத நடவடிக்கையாக திமுக போராட்டத்தில் கலந்து கொள்வதை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈ பி எஸ் விரும்பவில்லை இதே நிலை நீடித்தால் மற்ற இரண்டு எம் எல் ஏ களும் (கருணாஸ், தனியரசு )இதே போன்ற முடிவினை எடுப்பார்கள் என்றும், தற்போது தமிமுன் அன்சாரியை தகுதி நீக்கம் செய்ய இருவரும் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Loading...

திமுக போராட்டத்தில் அன்சாரி கலந்து கொள்ளும் பட்சத்தில் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் 6 ஆண்டுகள் தேர்தலில் நிக்க தடை உண்டாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது, தமிமுன் அன்சாரி மீது எடுக்கும் நடவடிக்கை தமிழக அரசியலில் பரபரப்பை உண்டாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.

Loading...

©TNNEWS24

Loading...

Trending