ஆம்பள மாதிரி வெளியே வா ஒழியாத எங்க இப்ப பேசு துரைமுருகனை கிழித்து தொங்கவிட்ட பிராமண பெண்!

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த துரை முருகன் என்பவர் மீது சமுதாயத்தில் பொது அமைதியை சீர் குலைக்கும் விதமாக வீடியோக்கள் வெளியிட்டு இறந்த தலைவர் ராஜீவ்காந்தியின் கொலையை நியாயப்படுத்துவதாகவும் ஊருக்குள் கலவரத்தை தூண்டுவதாகவும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் ரூபி மனோகரன் தலைமையில் புகார் அளித்தனர்.

Loading...

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் துரைமுருகனை தேடி வருகின்றனர், இந்நிலையில் அவர் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை செய்தபோது அவர் அங்கு இல்லை, துரைமுருகன் காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவு ஆகிவிட்டதாகவும் முன்ஜாமீன் கிடைக்கும்வரை தலைமறைவாக இருக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார், அப்போது பேசியவர், ப்ராமணர்களையும், பிராமண பெண்களையும் தரக்குறைவாக விமர்சித்தார், தங்கள் ஆட்சி அமைந்ததும் பிராமண பெண்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து உட்காரவைப்போம் என பேசியிருந்தார்.

Loading...

நாங்கள் மான தமிழ் பிள்ளைகள் இராணுவமே வந்தாலும் பயப்படமாட்டோம் என முன்னர் ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார், இந்நிலையில்தான் ராஜீவ்காந்தி சமாதியில் நின்று டிக் டாக் செய்த வழக்கில் தலைமறைவான துரைமுருகனை உமா ஆனந்தன் கிழி கிழியென கிழித்துள்ளார், வெட்கம் கெட்ட பயலே எங்க போன அன்று பிராமணர்களை நடுத்தெருவில் உட்க்காரவைப்போம், இராணுவமே வந்தாலும் பயப்படமாட்டோம் என பேசின.,

இப்போ ஏன்டா காவல்துறைக்கு பயந்து தலைமறைவான என கிழி கிழியென கிழித்துள்ளார், ஆம்பிள மாதிரி வெளியே வா ஏன் ஒளிந்து கொள்கிறாய் என்றும், மேலும் தான் ஏதோ விளையாட்டு தனமாக வீடியோ வெளியிட்டேன் மன்னித்து விடுங்கள் என பேசுகிறாய் வெட்கமாக இல்லை இப்படி காலில் விழ இவரு இராணுவம் வந்தாலும் அஞ்சாதவரா? என மிகவும் அழுத்தம் திருத்தமாக பேசியுள்ளார்.

மேலும் பலரும் துரைமுருகனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திவருவதால் அவர் விரைவில் கைதாவார் என்று எதிர்பார்க்க படுகிறது. அதே நேரத்தில் காவல்துறைக்கு பயந்து தலைமறைவு வாழ்கை வாழ்வதுதான் வீரமா எனவும் கிண்டல் அடித்து வருகின்றனர்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*