Connect with us

#24 Exclusive

இவரை தெரிகிறதா? நான் சாக போகிறேன் உங்களுக்கு செய்த பாவத்திற்கு மன்னித்து விடுங்கள் அமிதாப்பிடம் கெஞ்சும் பெரும்பணக்கார எம் பி !

பணம் பதவி, புகழ் அனைத்தும் சிலகாலம்தான் என்பதற்கு உதாரணமாக மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது, அமர்சிங் அதிரடி அரசியவாதி. கிங் மேக்கர் என்று சொல்லபட்டவர்.. இவர் நினைத்தால் ஒரு ஆட்சியை உருவாக்குவார்..கவிழ்ப்பார் பெரும் தொழிலதிபராக இருந்து அரசியலுக்கு வந்தவர்..அதனால் பணத்தை வைத்து எதையும் விலைக்கு வாங்க முடியும் என்று நினைத்தவர்.. நினைத்தவர் மட்டும் இல்லை நடத்தியும் காட்டியவர்.

அமிதாபட்சனால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர்… ஆனால் அந்த அமிதாபட்சனையே ஓரம் கட்டி விட்டு முன்னேறியவர்.. அரசியல் அரிச்சுவடியே உன்னை ஏற்றி விட்ட ஏணியை நேரம் கிடைக்கும் போது எட்டி உதைத்து விடு கூடவே அதை தூக்கி சுமக்காதே என்பதுதான்.. அந்த அரிச்சுவடியை படித்தவர்.

பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் முதல் பதவி காலத்தில் அவருக்கான ஆதரவை கம்யூனிஸ்ட் கட்சிகள் விலக்கி கொண்ட போது அவ்வளவு தான் மன்மோகன்சிங் ஆட்சி கவிழ போகிறது என்று கணித்த நிலையில் எதிர்பாராத விதமாக அது வரை மன்மோகன்சிங் ஆட்சியை கடுமையாக எதிர்த்து வந்த முலாயம் சிங் சமாஜ்வாடி கட்சியை ஒரே இரவில் மன்மோகன்சிங் அவர்களுக்கு ஆதர்வாக திருப்பி காங்கிரஸ் ஆட்சியை காப்பாற்றியவர்..

Loading...

அதே ஆட்சியில் தான் ஊழல் குற்றசாட்டில் சிறைக்கும் சென்றார்…
இன்றைக்கு அவரே சொல்கிறார்.. ”நான் மரணத்தின் வாயிலில் இருக்கிறேன்.அதனால் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.. முதலில் அமிதா பட்சன் அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். அரசியலுக்கு அழைத்து வந்த அவரை நான் உதறி தள்ளியது நான் செய்த பாவம் ” என்கிறார்..

Loading...

ம்…வாடகைக்கு வாங்கி வந்த வாழ்க்கையை நிரந்தரம் என்று கருதி என்ன ஆட்டம் எல்லாம் ஆடுகிறோம்.. மேலே ஒருவன் வாடகை வாழ்க்கையை என்றைக்கு காலி செய்ய சொல்ல போகிறான் என்று தெரியாமலேயே…
எது எப்படியோ…அமர்சிங் அவர்கள் நலம் பெற வேண்டும் என்று நினைப்போம் !

திரு – ஹரிஹரன்

Loading...

Trending