மஹாராஷ்டிராவில் ஆட்டத்தை ஆரம்பித்தார் அமிட்ஷா !

மஹாராஷ்டிராவில் ஆட்டத்தை ஆரம்பித்தார் அமிட்ஷா !

மஹாராஷ்டிராவில் ஆட்டத்தை ஆரம்பித்தார் அமிட்ஷா !

முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு இன்று 25 வருட கூட்டணியை இழந்தது மட்டுமல்லாமல் எம் எல் ஏ களையும் இழக்கப்போகிறது சிவசேனா !

மகாராஷ்டிரா அரசியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து திரு விஜயகுமார் அவர்கள் எழுதிய கட்டுரையை பின்வருமாறு :-

Loading...

மகாராஸ்டிராவில் சிவசேனா ஆடுகிற ஆட்டத்தை அமித்ஷா வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கிறாரே என்று எல்லோரும் வியப்பாக இருந்த நிலையில் சத்தம் இல்லாமல் கவர்னர் மூலமாக அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே சிவசேனாவை காலி செய்து விட்டார் அமித்ஷா.

Loading...

105 தொகுதிகளை பெற்று சிங்கிள் லார்ஜெஸ்ட் பார்ட்டியாக இருந்த பிஜேபிக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் 3 நாட்கள் மட்டுமே டைம் அளித்த பொழுது இன்னும் சில நாட்கள் அளித்து இருக்கலாமே என்று குழப்பத்தில் இருந்த பிஜேபியினருக்கு இப்பொழுது அமித்ஷாவின் சாணக்கியத்தனம் தெரிந்து இருக்கும்.

பிஜேபி ஆட்சி அமைக்க முன்வராததால் அடுத்து சிவசேனா தான் ஆட்சி அமைக்கும்
என்று எல்லோரும் எதிர்பார்த்து வந்த நிலையில் சிவசேனாவுக்கு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கடிதங்களை அளிக்க வில்லை.

சிவசேனாவுக்கு ஆட்சி அமைக்க 2 நாள் தான் டைம் என்பதால் அவுட்டாகிவிட்டது .அடுத்து தேசியவாத காங்கி ரஸ் ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டு அதற்கு 1 நாள் டைம் அளிக்கப்பட்டுள்ளதால் சிவசேனா முதல்வர் என்பதற்கு இனி வாய்ப்புகள் இல்லை.

தேசியவாத காங்கிரஸ் காங்கிரஸ் கூட்டணி
ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் மிக மிக குறைவாகவே இருக்கிறது.தேசியவாத காங்கிரஸ் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்குக்கு சிவசேனா ஆதரவு அளித்தால் தான் தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும் சூழ்நிலை உருவாகும்.

அப்படி ஒரு சூழ்நிலை உருவானால் மந்திரி சபையில் சிவசேனா வுக்கு காங்கிரஸ் இடம்
அளிக்காது. இதனால் சிவசேனா தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் ஆட்சி அமைய சிவசேனா வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் சூழல் ஏற்படும்.

சிவசேனா வுக்கு வேறு வழியில்லை என்பதால் தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து வெளியில்தான் அமரவேண்டும் இதற்கு சிவசேனா எம்எல்ஏக்கள் நிச்சயமாக
ஒத்துழைக்க மாட்டார்கள்.

இனி பிஜேபி உடன் கூட்டணி இல்லை என்பதால் தனியாக தேர்தலை சந்திக்கவும் சிவசேனாவால் முடியாது.அதுமட்டுமன்றி சிவசேனாவிடம் இருந்த இந்துத்வா வாக்குகள் இனி பிஜேபிக்கு சென்றுவிடும் .சிவசேனா செல்வாக்கு இழந்து அதனுடைய இந்துத்வா வாக்குகள் பிஜேபிக்கு வந்துவிடும் என்பதால் சிவசேனா கூட்டணியே பிஜேபிக்கு தேவையில்லை.

சிவசேனாவினால் காங்கிரஸ் தேசியவாத
காங்கிரஸ் கூட்டணிக்கு வெளியில் இருந்து
ஆதரவு அளிக்கும் மனப்பக்குவம் இல்லை
என்பதால் சிவசேனா நிச்சயமாக பிளவு படும் அப்பொழுது நாம் ஆட்டத்தை ஆடுவோம் என்று அமைதியாக இருக்கிறார் அமிட்ஷா இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நீண்டகால நண்பன் என்ற முறையில் சிவசேனாவை பாஜக எப்போதும் உடைக்க நினைத்தது இல்லை, ஆனால் தற்போது சிவசேனாவை பாஜக உடைக்கும் என்றோ அல்லது தானாக சிவசேனா உடையும் என்றோ பெரும்பாலும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன, எது எப்படியோ அமிட்ஷா அவரின் ஆட்டத்தை தொடங்கிவிட்டார் இனி சிவசேனா நிலைமை?

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *