உள்துறை அமைச்சர் ஆலோசனை கூட்டம் முடிவடைந்தது ! நாடு முழுவதும் முக்கிய மாற்றம் மாலையில் பிரகடனம்?

உள்துறை அமைச்சர் ஆலோசனை கூட்டம் முடிவடைந்தது ! நாடு முழுவதும் முக்கிய மாற்றம் மாலையில் பிரகடனம்?

அமெரிக்க அதிபர் இந்தியாவில் இருக்கும் நேரத்தில் டெல்லியில் ஏற்பட்டுள்ள கலவரம் நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, நேற்று மாலை வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல் திடீரென கலவரமாக மாறியது.

அதனை தொடர்ந்து டெல்லியில் காவலர் ஒருவர் கற்களால் அடித்து கொல்லப்பட்டார், இதுவரை 7 பேர் கலவரத்திற்கு பலியாகியுள்ளனர், மேலும் துப்பாக்கியை கொண்டு ஷாருக் என்ற இளைஞன் காவல்துறை அதிகாரியை சுட்டது வீடியோவாக வெளியாகி பதற்றத்தை அதிகரித்தது. மேலும் பல வீடுகள் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளன.

அதனையடுத்து நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமிட்ஷா உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள், காவல்துறையினருடன் ஆலோசனை நடத்தினார், இதனையடுத்து இன்று நண்பகல் 12 மணிக்கு உள்துறை அமைச்சர் அமிட்ஷா டெல்லி துணை நிலை ஆளுநர், முதல்வர் கெஜ்ரிவால், காவல்துறை உயர் அதிகாரிகள், அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Loading...

கூட்டத்தின் முடிவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் தலை நகர், சிரியாவாக மாறிவருவதாகவும் இனியும் பொறுமை காத்தால் ஒட்டுமொத்த இந்தியாவிலும் கலவரம் பரவ வாய்ப்பு இருப்பதாகவும் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் கூறியதாக கூறப்படுகிறது.

Loading...

அதே நேரத்தில் இன்று இரவு அமெரிக்க அதிபர் தனது நாட்டிற்கு கிளம்பிய பிறகு, மோடி உள்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும், டெல்லியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன, இதனால் பின்னணியில் போராட்டத்தை தூண்டியவர்கள், சட்டவிரோதமாக பணம் பெற்றவர்கள் ஆகியோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது.

நாடே தற்போது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறது.

©TNNEWS24

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *