அமிட்ஷாவிற்கு கொரோனா இருப்பதாக தற்போது பரவலாகும் செய்தி உண்மையா?

அமிட்ஷாவிற்கு கொரோனா இருப்பதாக தற்போது பரவலாகும் செய்தி உண்மையா?

Loading...

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பு உலக அளவில் உள்ள மக்களை மிகப்பெரிய அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. நடிகர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலதரப்பட்டவர்கள் கரோனா பாதிப்புக்கு உள்ளாவதால் சமூக விலகலை கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் #WhereIsAmitshah என்ற ஹேஷ்டேக்கில் அமித்ஷா எங்கே என்பதுபோன்ற கேள்விகளை சமூக வலைத்தளவாசிகள் எழுப்பி வந்தனர். தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரபல இந்தி செய்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Loading...

அதனைப் பகிர்ந்த சமூக வலைத்தளவாசிகள், அமித் ஷாவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாக குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால், சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அந்த செய்தி தொலைக்காட்சி புகைப்படம் உண்மை இல்லை எனவும் எடிட் செய்யப்பட்டது எனவும் மத்திய அரசின் தகவல் பணியகத்தின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொடர்பாக அவ்வப்போது பகிரப்படும் தகவல்கள் உண்மையா அல்லது வதந்தியா என்பதனை PIB Factcheck ட்விட்டர் கணக்கு விளக்கி வருகிறது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*