அமிட்ஷாவை ஒருமையில் திட்டிய நபர் கண்டும் காணாமல் விவாதத்தில் வேடிக்கை பார்த்த நெல்சன் ! திட்டமிட்டு அரங்கேறுகிறதா?

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறுவது குறித்து மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுப்பது யார் என்பது தனியார் தொலைக்காட்சியில் விவாதம் நடைபெற்றது இதில் அதிமுக.சார்பில் முன்னாள் அமைச்சர் செம்மலை, திமுக சார்பில் எழிலரசன் எம் எல் ஏ , அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற தனியரசு எம் எல் ஏ, அரசியல் விமர்ச்சகர்கள் சுமந்த் சி ராமன், காந்த ராஜ் உட்பட 5 பேர் கலந்து கொண்டனர்.

Loading...

விவாதத்தில் பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர் அதிமுகவை பொறுத்தவரையில் சட்டத்தை நீக்குவது எங்கள் கையில் இல்லை என முதல்வர் சொல்லிவிட்டார், மேலும் குடியுரிமை சட்டத்தால் இந்தியாவை சேர்ந்த யாராவது பாதிக்கபட்டால் கூறுங்கள் எனவும் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறியிருக்கிறாரே என நெறியாளர் நெல்சன் காந்தராஜ் என்ற புதிய விமர்சகர் ஒருவரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசியவர் கொரனோ வந்தால் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடக்கவில்லையா அதுபோல் இனி முஸ்லிம்களுக்கு எதிராக எதுவும் வரக்கூடாதுன்னு தான் என வித்தியாசமான விமர்சனத்தை முன்வைத்தார், அத்துடன் அமிட்ஷா ஏன் முஸ்லீம் கொடுக்கும் பெட்ரோலிலும், கிறிஸ்டின் கண்டுபிடித்த விமானத்திலும் போகிறான் என பல ஆயிரம் பேர் பார்க்கும் விவாதத்தில் ஒருமையில் திட்டினார்.

Loading...

ஆனால் விவாதத்தில் பங்கேற்ற நபர்களோ அல்லது விவாதத்தை முன்னெடுத்த நெல்சனோ இதுகுறித்து எந்த கண்டனத்தையும் பதிவு செய்யவில்லை மாறாக பெயருக்கு மக்கள் மொழியில் பேசுகிறார் என சமாளித்தார், இந்நிலையில்தான் இங்கு திட்டமிட்டு தமிழக ஊடகத்தில் பணிபுரிபவர்கள் தெருமுனை கூட்டத்தில் பேசுபவர்களை அழைத்து வந்து ஊடகங்களில் பாஜக அதன் தலைவர்களை மரியாதை குறைவாக பேச சொல்கிறார்களா எனவும்..,

இதே போன்று ஒருவர் திமுக தலைவர் ஸ்டாலினை இதே வார்த்தையை பயன்படுத்தி இருந்தால் அப்போதும் நெல்சன் இப்படித்தான் அமைதியாக இருப்பாரா எனவும் கேள்வி எழுப்பு கின்றனர், இந்நிலையில் தற்போது பாஜகவை சேர்ந்தவர்கள் தனியார் ஊடகத்தின் நடுநிலை அற்ற செயலை கண்டித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

குறிப்பிட்ட கட்சியின் பிரதிநிதிகள் விவாதத்தில் பங்கேற்கவில்லை என்றால் நெறியாளர் அவர்கள் குறித்து பேச அனுமதிக்கமாட்டார், ஆனால் நெல்சன் மிகவும் தரக்குறைவாக நடந்து கொள்வதாகவும் இதுதான் ஊடகம் தர்மமா எனவும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் திட்டமிட்டு பாஜக தலைவர்களை அவமரியாதை செய்யும் நிகழ்ச்சியில் தமிழக ஊடகங்கள் இறங்கிவிட்டனவா எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*