Connect with us

Uncategorized

அமிட்ஷாவை அவசரமாக சந்தித்த அஜித் தோவல் என்ன நடக்கிறது தமிழகத்தில், துணை இராணுவம் வருகிறதா?

Published

on

டெல்லி,

உள்துறை அமைச்சர் அமிட்ஷாவை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்டோவல் அவசரமாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார், தமிழகத்தில் SI வில்சன் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம், டெல்லியில் ISIS ஆதரவாளர்கள் மூவர் பிடிபட்டது, கேரளாவில் தீவிரவாதிகள் மூவர் பிடிபட்டது என பல்வேறு சம்பவங்கள் கடந்த 48 மணி நேரத்தில் அரங்கேறியுள்ளன.

தமிழகத்தில் எத்தனை பேருக்கு இந்தசம்பவம் தெரியும் என்று தெரியவில்லை காரணம் டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்ட செய்தியை விவாதம் நடத்திய ஊடகங்கள் தீவிரவாதிகள் தமிழகத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரியை சுட்டு கொலை செய்துவிட்டு தலைமறைவானதை அதிக அளவில் மக்களிடம் எடுத்து செல்லவில்லை.

Loading...

கன்னியாகுமாரி பகுதியை சேர்த்த ஸமித் என்ற தீவிரவாதி கேரளாவில் தனது கூட்டாளிகள் மூவரை அதிரடியாக உளவு பிரிவினர் கைது செய்ததை தொடர்ந்து கேரளா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு தனது கூட்டாளிகளுடன் தப்பி வந்துள்ளான் அப்போது சோதனை சாவடியில் காரை மடக்கி SI வில்சன் சோதனை செய்தபோது சமித் வில்சனை சுட்டுகொன்றுவிட்டு இஸ்லாமிய குடியிருப்பு பகுதியில் சென்று பதுக்கிவிட்டான்.

Loading...

காவல்துறை 8 தனிப்படைகளை கொண்டு நடத்திய விசாரணையில் தீவிரவாதிகள் சுட்டு கொன்றுவிட்டு துப்பாக்கியுடன் ஓடும் காட்சிகள் கிடைத்தன, ஆனால் அதை விட மிக கொடூரமாக இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்றது போன்று இந்து கோவில்களை குறிவைத்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் முடிவெடுத்து அதற்கான வேலைகளில் 90% நிறைவேற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமிட்ஷாவினை சந்தித்து அஜித் தோவல் விளக்கம் அளித்துள்ளார், காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டது உள்ளிட்ட பல சம்பவங்களுக்கு பலி தீர்க்க வெளிநாடுகளில் உள்ள அமைப்பை சேர்ந்தவர்கள் துணையுடன் இந்த சதி திட்டத்தில் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது, இதற்கிடையே தீவிரவாதத்திற்கு உதவிய முக்கிய நபர்களை NIA இன்று கைது செய்ய இருப்பதாகவும் மிக பெரிய சதித்திட்டம் வெளிவர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Caa எனப்படும் குடியுரிமை சட்டத்தில் பாக்கிஸ்தான் பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்க அரசு முன்வராத காரணம் அப்பாவிகளை பயன்படுத்தி தீவிரவாதிகளும் உள்ளே வரும் அபாயம் இருப்பதால்தான் என்று கூறப்பட்டது, ஆனால் இங்குள்ள அரசியல் கட்சிகள் நாட்டு நலன் சார்ந்து யோசிக்காமல் இருந்ததன் பயன் இன்று வில்சன் என்ற காவல்துறை அதிகாரி தீவிரவாதிகளால் தமிழகத்தில் துடிக்க துடிக்க கொல்லப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கீழக்கரை, தொண்டி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சாயல்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்றும் இவர்கள் மிக பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருக்கும் சூழலில் அவசரமாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை அமைச்சரை சந்தித்திருப்பது மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

துணை இராணுவம் வருமா?

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending