Connect with us

#24 Exclusive

இதைத்தானே அமிட்ஷா சொன்னாரு பானு கோம்ஸ் கிண்டல் ! திருமாவளவன் பல்டி

பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் திமுக தலைமையில் கண்டன ஊர்வலங்களை நடத்தினர், அப்போது பேசிய தலைவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்குள் வந்த இந்துக்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கவில்லை என்றும் இதில் உள்நோக்கம் இருப்பதாகவும் கேள்வி கேட்டிருந்தனர்.

இதையே நாடாளுமன்றத்தில் கேள்வியாக கேட்ட போது உள்துறை அமைச்சர் அமிட்ஷா இலங்கை தமிழர் விவகாரம் வேறு தற்போதைய குடியுரிமை திருத்த சட்டம் வேறு என்றும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதை வேறுவிதமாக அணுக வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார், இதனை அப்போது எதிர்த்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி தலைமையில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு..,

திருமாவளவன் பேசிய கருத்துக்கள் தற்போது பலத்த கிண்டலுக்கு உள்ளாகியுள்ளன, அதிலும் குறிப்பாக இலங்கை தமிழருக்கு குடியுரிமை வழங்கும் விவகாரத்தை ..CAA-வோடு பொருத்திப் பார்க்க தேவையில்லை. அதற்கென தனி சட்டத்தை இலங்கை அரசோடு கலந்து பேசி இந்திய அரசு எடுக்க வேண்டும்” என்று பேசி இருந்தார் இதனை சமூக செயற்பாட்டாளரும், அரசியல் விமர்சகருமான பானு கோம்ஸ் கிண்டல் அடித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு :-

Loading...

CAA-விற்கு எதிராக டெல்லியில் சோனியா-காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர்..திருமாவளவன் கூறியது :
”இலங்கை தமிழருக்கு குடியுரிமை வழங்கும் விவகாரத்தை ..CAA-வோடு பொருத்திப் பார்க்க தேவையில்லை. அதற்கென தனி சட்டத்தை இலங்கை அரசோடு கலந்து பேசி இந்திய அரசு எடுக்க வேண்டும்”
!!!!!!!

Loading...

”CAA ஒரு குறிப்பிட்ட பகுதி & தேவைக்கானது. இலங்கை தமிழர் குடியுரிமைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அதற்கு தனியாக அணுக வேண்டும் என்று அமிதாஷா பாராளுமன்றத்திலேயே கூறினார்” என்று மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறியபோதெல்லாம்… மறுத்து… தமிழருக்கு எதிரானது என்று பொய் பிரச்சாரம் நடத்தப்பட்டது என்பது அவர்கள் வாயிலிருந்தே வெளிப்பட்டிருக்கிறது !! 😀

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.
1)எதிர்ப்புக்கு பெருவாரி இந்திய மக்களிடம் ஆதரவில்லை என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.
2)இன்னொன்று…கட்சிகள் அணி மாறும் நிலையை இது வெளிப்படுத்துகிறது. இவ்வாறு அவர் கிண்டல் அடித்துள்ளார்.

இலங்கை இந்துக்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கவில்லை என்று கேள்வி எழுப்பிய திருமாவளவன் திடீர் என அது வேறு விவகாரம் என பல்டி அடித்திருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

©TNNEWS24

Loading...

Trending