Connect with us

சினிமா

ஒரு தமிழரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் அமிதாப் பச்சான் ! – யார் அந்த பிரபலம் ?

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவைகளை செய்துவரும் பாலம் கல்யாண சுந்தரத்தின் வாழ்க்கை வரலாறு அமிதாப் பச்சன் நடிக்க இருக்கிறார்.

பாலம் என்ற சமூக சேவை அமைப்பை தொடங்கி பல வருடங்களாக அதன் மூலம் பல்வேறு சமூகநல தொண்டுகளை செய்து வருகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்யாணசுந்தரம். இவரது தொண்டையை பாராட்டி அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் இவருக்கு 30 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியது. ஆனால் அந்தத் தொகையையும் அவர் சமூக சேவை செய்வதற்காகவே அளித்தார்.

இவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகம் சமீபத்தில் ஆங்கிலத்தில் வெளியானது. இந்த புத்தகத்தை படித்து அவரைப் பற்றி தெரிந்து கொண்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இப்போது அவரது வாழ்க்கை வரலாற்றில் நடிக்க இருக்கிறார். சிறுவயது கல்யாணசுந்தரம் அவர்கள் நடிக்க அமிதாப்பின் மகன் அபிஷேக் பச்சன் ஒப்பந்தமாகியுள்ளார்.

Loading...

இது தொடர்பாக பாலம் கல்யாணசுந்தரத்தை சந்தித்து தயாரிப்பாளர் பரண் ஆதர்ஸ் சம்மதம் வாங்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் கிடைக்கும் ராயல்டி தொகையும் அவர் சமூக தொண்டுகளில் செலவிட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாலிவுட்டில் இப்போது பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று படங்களில் அதிக அளவில் வெளியாகி வெற்றி பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
Loading...

Trending