Connect with us

சினிமா

முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நடிக்க ஆசைப்பட்ட சூப்பர் ஸ்டார் – மனம் திறந்த பாக்யராஜ் !

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகரான அமிதாப்பச்சன் முந்தானை முடிச்சு படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் புதுமுகங்கள் நடிக்கும் பூதமங்கலம் போஸ்ட் எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் கலந்து கொண்ட நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.

விழாவில் பேசிய அவர் ‘ நான் இயக்கிய முந்தானை முடிச்சு திரைப்படத்தைப் பற்றி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கேள்விப்பட்டு அதை பார்க்க விரும்பினார். அவருக்காக அதை தனியாக திரையிட்டு காட்டினேன். படம் அவருக்கு மிகவும் பிடித்திருந்ததால் அந்த திரைப்படத்தில் நடிக்க விரும்பினார். ஆனால் தொடர்ந்து ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வந்த அவர் இந்த கதையில் நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என தயங்கினார்.

Loading...

அதனால் தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டு என்னையும் பட்ஜெட்டை குறைக்க சொன்னார். ஒருவேளை படம் ஓடவில்லை என்றால் கூட தயாரிப்பாளருக்கு நஷ்டம் வராது என்பதால் அந்த முடிவை எடுத்தார். ஆனால் தயாரிப்பாளர் அந்த முடிவை நிராகரித்ததால் அந்த படம் எடுக்க முடியாமல் போனது.’ எனக் கூறியுள்ளார்.

Loading...

பாக்யராஜ் தான் கதை திரைக்கதை வசனம் எழுதிய ஒரு கைதியின் டைரி திரைப்படத்தை ஹிந்தியில் அமிதாப் பச்சனை வைத்து இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

Trending