கருப்பின நபரைக் கொலை செய்த அமெரிக்க போலிஸ் – அவரின் மனைவி கொடுத்த தண்டனை!

கருப்பின நபரைக் கொலை செய்த அமெரிக்க போலிஸ் – அவரின் மனைவி கொடுத்த தண்டனை!

Loading...

அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஒருவரை கொடுமையாக சாலையில் வைத்துக் கொலை செய்த போலிஸ்காரருக்கு அவரது மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அமெரிக்காவின் மினியபோலிஸ் பகுதியில் நிறவெறி காரணமாக காவல்துறையினராக கருப்பினத்தவரைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவரை வெள்ளையினத்தைச் சேர்ந்த போலிஸார் கழுத்தில் காலை வைத்து மிதித்தேக் கொன்றுள்ளனர். இது சம்மந்தமாக போலிஸார் இந்த கொடூரத்தை எடுத்துக் காட்டும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பிளாய்டு ‘என்னால் சுவாசிக்க முடியவில்லை. என்னைக் கொல்லாதீர்கள்’ எனக் கூறிக்கொண்டே இறப்பது காண்பவர்களை குலையச் செய்கிறது.

Loading...

இந்நிலையில் அமெரிக்காவில் நடந்த நிறவெறி கொடூரத்துக்கு எதிராக கருப்பின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல் நிலையத்தின் நுழைவாயிலுக்கு கிளர்ச்சியாளர்கள் தீ வைத்தனர். இந்த போராட்டங்களால் பல இடங்களில் மக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் நின்று ‘எங்களால் மூச்சு விடமுடியவில்லை’ என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த கொலையை செய்த காவலரின் மனைவி, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கணவரின் செயலால் வேதனை அடைந்துள்ளதாகவும், அதன் காரணமாக தனது வழக்கறிஞர் மூலம் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*