என்னால் சுவாசிக்க முடியவில்லை – அமெரிக்காவில் கருப்பினத்தவர் போராட்டம்!

என்னால் சுவாசிக்க முடியவில்லை – அமெரிக்காவில் கருப்பினத்தவர் போராட்டம்!

Loading...

அமெரிக்காவின் மினியபோலிஸ் பகுதியில் கருப்பினத்தவர் ஒருவரை சாலையில் வைத்து கொலை செய்த போலிஸாருக்கு எதிராக கருப்பின மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவின் மினியபோலிஸ் பகுதியில் நிறவெறி காரணமாக காவல்துறையினராக கருப்பினத்தவரைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவரை வெள்ளையினத்தைச் சேர்ந்த போலிஸார் கழுத்தில் காலை வைத்து மிதித்தேக் கொன்றுள்ளனர். இது சம்மந்தமாக போலிஸார் இந்த கொடூரத்தை எடுத்துக் காட்டும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பிளாய்டு ‘என்னால் சுவாசிக்க முடியவில்லை. என்னைக் கொல்லாதீர்கள்’ எனக் கூறிக்கொண்டே இறப்பது காண்பவர்களை குலையச் செய்கிறது.

Loading...

இந்நிலையில் அமெரிக்காவில் நடந்த நிறவெறி கொடூரத்துக்கு எதிராக கருப்பின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல் நிலையத்தின் நுழைவாயிலுக்கு கிளர்ச்சியாளர்கள் தீ வைத்தனர். இந்த போராட்டங்களால் பல இடங்களில் மக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் நின்று ‘எங்களால் மூச்சு விடமுடியவில்லை’ என கோஷம் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

இந்த போராட்டங்கள் பெரிதாக பல இடங்களில் போலிஸார், கண்ணிர்ப்புகைக் குண்டுகள் மற்றும் டம்மி தோட்டாக்கள் மூலம் துப்பாக்கிச் சூடு ஆகியவற்றை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் பற்றி அமெரிக்க அதிபர் போராட்டக்காரர்களை குண்டர்கள் எனக் கூறியுள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*