அமெரிக்காவில் ஒரே நாளில் இத்தனை பேரா ? ஊரடங்கை நீட்டித்த ட்ரம்ப்!

அமெரிக்காவில் ஒரே நாளில் இத்தனை பேரா ? ஊரடங்கை நீட்டித்த ட்ரம்ப்!

Loading...

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 18,000 பேர் வரை பாதிக்கபப்ட்டு இருக்கும் நிலையில் ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,00,000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 34,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. சீனாவுக்கு பின்னர் அதிக இடத்தில் இருந்த இத்தாலி அதிகளவில் உயிர்பலிகளைக் கொண்ட நாடாக இன்றளவும் இருந்து வருகிறது. இந்நிலையில் இப்போது இந்த இரண்டு நாடுகளை விடவும் அதிகளவிலான கொரோனா பாதிப்பு கொண்ட நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

Loading...

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் அமெரிக்காவில் கொரொனா பாதிக்கப்பட்டவர்களாக 18,726 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அதே போல நேற்று ஒரே நாளில் 255 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டில் மொத்த பலி எண்ணிகை 2470 ஆக உள்ளது. உலகிலேயே அதிகமாக கொரோனா பாதிப்புக் கொண்டவர்களை உடைய நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. அந்நாட்டில் இப்போது 1,41,854 பேர் வைரஸால் பாதிக்கபப்ட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கிறேன். அடுத்த சில வாரங்களில் இறப்பு உச்சத்தை எட்டும். ஜூன் மாதம் 1 ஆம் தேதிக்குப் பிறகு விடிவு பிறக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*