Connect with us

அரசியல்

திரும்ப வந்துடாதீங்க டிரம்ப் – டுவிட்டரில் வம்பிழுக்கும் அமெரிக்கர் !

அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று இந்தியா வந்துள்ளதை அடுத்து அவரை கலாய்க்கும் விதமாக சமூக வலைதளங்களில் பல பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்தியாவுக்கு நட்புரீதியான பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வந்துள்ளார். அவருக்கு இங்கே உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. டிரம்பின் பயணத்திற்காக இந்திய அரசு சுமார் 100 கோடி ரூபாயை செலவு செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இன்று ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இந்தியாவிற்கு கிளம்பிவிட்டேன் ‘ என ஒரு ட்வீட்டை பகிர்ந்தார். அதில் கமெண்ட் செய்த அமெரிக்கர் ஒருவர் ‘தயவுசெய்து திரும்பி வந்து விடாதீர்கள்’ என குறும்பாக சொல்லியுள்ளார். அந்த கமெண்ட்டை ஸ்கிரீன் சாட் எடுத்து உலகமெங்கும் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.

Loading...

இதே போல இந்தியாவிலும் டிரம்புக்கு எதிராக go back trump என்ற ஹேஸ்டேக் டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending