Connect with us

#24 Exclusive

அம்பானிக்கு பொங்கல் பரிசாக ஆப்பு அடித்தது மோடி அரசு ! கூடவே திமுகவிற்கும் ஆப்பு !!

தமிழகத்தில் திமுகவில் தொடங்கி யூடுப் சேனல் நடத்தி மீன் மார்க்கெட் வியாபாரம் போல் பேசும் சுந்தரவள்ளி வரை அனைவரும் ஒரு தகவலை அழுத்தி சொல்லி வந்தார்கள் அது மோடி அரசு அம்பானி போன்ற பெரு முதலாளிகளுக்கு உதவும் அரசு என்று ஆனால் இதை பல காலமாக பாஜகவினர் மறுத்து வந்தனர், மேலும் காங்கிரஸ் ஆட்சியில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொடுக்கப்பட்ட கடனையும் மோடி ஆட்சியில் கொடுக்கப்பட்ட கடனையும் வசூல் செய்யும் முறையையும் தரவுகளாக கூறியும் விமர்சனங்கள் குறையவில்லை.

இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசு மிக பெரிய ஆப்பு ஒன்றிணை வைத்துள்ளது, ரிலையன்ஸ் பங்குகளை சவூதி அரேபியாவுக்கு விற்க கூடாது என மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கியிருக்கிறது, கூடவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் சொத்து விவரங்களை தரவேண்டும் எனவும் அந்நிறுவனத்திடம் கேட்டிருக்கிறது.

ஆனால் ரிலையன்ஸ் நிறுவனம் சொத்துப்பட்டியலை மத்திய அரசு கேட்டதற்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது, தற்போது பிரச்சினை என்னவென்றால், மும்பைக்கு பக்கத்திலே பனா முக்தி மற்றும் தப்தி எனும் எரிவாயு கிணறுகளை 1994 இல் ரிலையன்ஸ் நிறுவனம் அமெரிக்க என்ரான் நிறுவனத்தோடு சேர்ந்து 25 வருட குத்தகைக்கு எடுத்தது.

Loading...

அதில் அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை பாக்கி மொத்தம் 4.5 பில்லியன் டாலர்கள் அதாவது 30 ஆயிரம் கோடி நிலுவையில் நிற்கிறது . இவற்றில் ரிலையன்ஸ் நிறுவனம் கொடுக்கவேண்டியது மூன்றிலே ஒரு பங்கு தொகையான 10 ஆயிரம் கோடி.

Loading...

2019- வருடம் ரிலையன்ஸ் தன்னுடைய 20% பங்குகளை விற்று 15 பில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ஒரு லட்சம் கோடி வாங்க முடிவு செய்தது. ஆனால் இங்குதான் ஆப்பு வைத்தது மோடி அரசு தற்போது மத்திய அரசு என்ன சொல்கிறது என்றால் அரசிற்கு 1994 ம் ஆண்டு கொடுக்கவேண்டிய ஒப்பந்தம் தொகை பத்தாயிரம் கோடியை கட்டிவிட்டு 20% பங்குகளை ஒரு லட்சம் கோடிக்கு விற்று கொள்ளுங்கள் என அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டது.

இவற்றில் கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்பு தான் இந்த கூடுதல் பத்தாயிரம் கோடி கட்டவேண்டும் என உத்தரவே போடப்பட்டது ஏன் என்றால் 1994 இல் இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை குத்தகைக்கு விடும்போது அடிமாட்டு விலைக்கு விற்று இருக்கிறார்கள், விற்றது யார் என்றால் காங்கிரஸ் அரசுதான், மோடி அரசு ஆட்சிக்குவந்து உடனடியாக ஏல தொகையை உயர்த்தியது ரிலையன்ஸ் நிறுவனம் கூடுதலாக 10 ஆயிரம் கோடி கட்ட உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது பாஜகவினர் இந்த சம்பவங்களை முன்வைத்து கடுமையாக பலரையும் விமர்சனம் செய்து வருகின்றனர், மோடி அம்பானிக்கு உதவுகிறார் என குறை கூறியவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர், இதுகுறித்து அம்பானியின் தமிழ் செய்தி தொலைக்காட்சி விவாதம் நடத்துமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

இதற்கிடையில் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் நிலுவையில் வைத்துள்ள தொகை, மும்பையில் செய்துள்ள முதலீடுகள் குறித்த அனைத்து கணக்கையும் திரட்டி விட்டது என்கிறார்கள் அதனால்தான் தற்போது திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கமுக்கமாக வெளியேற நினைக்கிறதோ???

Loading...

Trending