கடைசிவரை பதில்சொல்லாமல் தெறித்து ஓடிய ஷாநவாஸ் தெறிக்கவிட்ட சத்யகுமார் !

Loading...

சமூகவலைத்தளம்.,

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நேற்று (15/0919) இரவு உள்துறை அமைச்சர் அமிட்ஷா இந்தியை நாடு முழுவதுக்குமான மொழியாக மாற்ற வேண்டும் என்று இந்தி திவாஸ் நாளில் பேசியதை சுட்டிக்காட்டி விவாதம் நடத்தியது.

Loading...

இதில் புதுவை முதல்வர் நாராயணசாமி, பாஜக செய்தி தொடர்பாளர் S R சேகர், திமுகவில் இருந்து மனுஸ்ய புத்திரன், விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஷாநவாஸ், அரசியல் விமர்சகர் சத்யகுமார் ஆகியோர் இணைந்து பங்கேற்றனர். விவாதத்தின் தொடக்கத்தில் திமுகவை சேர்ந்த மனுஸ்ய புத்திரன் நாடு மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், பாஜக அரசு இந்தியை திணிக்க செயல்படுகிறது என்றும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார்.

பாஜக சார்பில் பங்கேற்ற செய்தி தொடர்பாளர் சேகர் இந்தி வளர்ச்சி பிரிவு உள்துறை அமைச்சகத்திடம் இருப்பதால் அமிட்ஸா அவ்வாறு பேசியிருக்கிறார், இதற்கு முன்னர் இருந்த அனைத்து உள்துறை அமைச்சர்களும் இதுபோன்று பேசியுள்ளனர் என்றும் பாஜக அரசாங்கம் மட்டுமே மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற கட்சி நிதி அமைச்சகம் தேர்வை தாய்மொழியில் எழுத சட்டம் கொண்டுவந்தது போன்ற பல்வேறு நடைமுறைகளை சுட்டிக்காட்டினார்.

அதன் பிறகு விமர்சகர் சத்யகுமாரிடம் நெறியாளர் தம்பி தமிழரசன் ஏன் பாஜக இந்தியை திணிக்க பார்க்கிறது அதில் என்ன லாபம் என்றும் கேள்வி எழுப்பினார், அதற்கு பதில் சொன்ன சத்யகுமார், நாடுமுழுவது வியாபாரம் முதல் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இணைப்பு மொழி தேவைப்படுவதால் 40% நபர்கள் பேசும் இந்தி மொழியை மத்திய அரசு முன்னிலை படுத்துகிறது என்றும் மத்திய அரசு எந்த மொழியையும் அவமான படுத்தவில்லை என்னுடைய தாய் மொழியான தமிழை காட்டுமிராண்டி என்று அவமானப்படுத்திய பெரியார் போன்று அல்ல என்று அதிரடியாக பேசினார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத மனுஸ்யபுத்திரன் பெரியார் அவ்வாறு பேசியது அறிவியலை வளர்க்க என்று சொல்ல பார்த்துக்கொண்டிருந்த மக்கள் மத்தியில் தாய் மொழி தமிழ் இல்லாத பெரியார் எப்படி தமிழை காட்டு மிராண்டி மொழி என்று சொன்னது நியாயம் என்று எண்ணதுவங்கினர்.

அதன் பிறகு பேசிய ஷாநவாஸ் இந்தியா முழுவதும் 57% மக்கள் இந்தி பேசவில்லை எனவே அதனை மத்திய அரசு திணிப்பது தவறு, மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் மத்திய அரசு ஈடுபடுவது கடுமையான அழிவை தரும் என்றும் பலவிதமான எடுத்துக்காட்டுகளை அடுக்கி தெரிவித்தார் அப்போது குறுக்கிட்ட சத்யகுமார் தமிழகத்தில் உருது மொழியை திணிக்கலாமா அதனை பற்றிய உங்கள் கருத்து என்ன என்று கேட்க ஆடிப்போய்விட்டார்.

கடைசிவரை அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் அது சிறுபான்மையினருக்கு இந்த நாடு கொடுத்திருக்கிற உரிமை என்றும் பேசினார் அப்போது குறுக்கிட்ட சத்யகுமார் தமிழகத்தில் தமிழர்களுக்கு துளியும் சம்பந்தம் இல்லாத உருது மொழியை திணிக்கலாமா என்று நேரடியாக பதில் சொல்லுங்கள் என்று விடாப்பிடியாக கேட்டார்.

அதற்கு பதில் சொல்லமுடியாத ஷாநவாஸ் இது மிகப்பெரிய அராஜகம் 6 ஆண்டுகளாக ஊடகவிவாதத்தில் பங்கேற்கிறேன் இப்படி இல்லை என்றுகூறி கடைசிவரை உருது மொழி பற்றிய நேரடியானகேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் தெறித்து ஓடிவிட்டார்.

தற்போது பலரும் ஷாநவாஸை தொடர்பு கொண்டு தமிழர்களுக்கு சம்பந்தம் இல்லாத உருது மொழிக்காக ஏன் விவாதத்தில் இருந்து வெளியேறவேண்டும் கடைசிவரை ஏன் பதில் சொல்லவில்லை என்று கேள்வி எழுப்பி வறுத்து எடுத்து வருகின்றனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*