Connect with us

#24 Exclusive

ஆளூர் ஷா நவாஸ் மீண்டு வர பிராத்திக்கும் சிறுத்தைகள் !

உலகில் பல நாடுகளை பழிவாங்கி கொண்டுள்ள கொரோனா எனும் உயிர்கொல்லி நோயானது உலகின் மிக பெரிய மக்கள் தொகையை கொண்ட இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது, குறிப்பாக மேற்கு உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா தாக்கி அழித்துள்ளது என்றே கூறலாம்.

இந்த நிலையில் வளரும் நாடான இந்தியாவில் கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்ள வீட்டில் இருந்து வெளியே வராமல் இருப்பதே ஒரே வழி என நாட்டு மக்களுக்கு பிரதமர் நேற்று அறிவித்துவிட்டார், மேலும் 21 நாட்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்கும் பொது மக்கள் வெளியே வர கூடாது எனவும் நாடு முழுவதும் முடக்க படுவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் பெரும்பாலான அரசியல் கட்சிகள், கொரோனா விஷயத்தில் தற்போது அரசியல் தேவையில்லை என்று கூறி ஒதுங்கிவிட்டன, ஏன் அனைத்திலும் அரசியல் செய்யும் திமுக நேற்று பிரதமரின் 21 நாள் ஊரடங்கு விவகாரத்தை முழுவதும் ஆதரிப்பதாக கூறி அதன் தலைவர் ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.

Loading...

நாட்டின் பல்வேறு கட்சிகள் வரவேற்று அறிக்கை வெளியிட்டு வருகின்றன, இந்நிலையில் வழக்கம் போல் கொரோனா தொற்று நேரத்திலும் ஆளூர் ஷா நவாஸ் அரசியலில் ஈடுபடுவது சொந்த கட்சியினர் மத்தியிலும் வெறுப்பை உண்டாகியுள்ளது, அனைத்தையும் கடந்து மக்கள் உயிரை காக்க ஒன்றிணைய வேண்டிய நேரத்தில் பிரதமரின் நேற்றய பேச்சு குறித்தும்..,

Loading...

அதற்கு முந்தைய பேச்சில் கைதட்ட சொன்னதும் குறித்தும் விமர்சித்துள்ளார், இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மாண்புமிகு பிரதமரின் அறிவிப்பை முழுமையாக வரவேற்பதாகவும் அதனை விடுதலை சிறுத்தைகள் பின்பற்றவேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆனால் ஷா நவாஸ் விமர்சிக்கிறார், இதனையடுத்து கொடூர நோய் தாக்கத்தில் கூட அரசியலில் ஈடுபடும் ஷாநவாஸ் போன்றோர் விரைவில் தங்கள் அறியாமை அரசியலை கைவிட்டு விரைவில் மீண்டு வர பிராத்திப்போம் இல்லை என்றால் இதே போல் உலகம் தட்டையானது என்ற அரசியலே நிகழ வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

குறைந்தபட்சம் இந்த நேரத்தில் அரசியலில் ஈடுபடுவதை தவிர்த்து மனிதநேயத்தோடு ஒன்றிணைவதே இந்திய மக்களை காக்க கூடிய ஒரே ஆயுதம் இதை புரிந்து கொள்வார்களா இன்றைய இரண்டாம்தர அரசியல்வாதிகள்?

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending