இப்படியா பிறந்தநாள் வாழ்த்து சொல்வது! அல்லு அர்ஜுன் ரசிகர்களிடம் சிக்கிய நெட்பிளிக்ஸ்!

இப்படியா பிறந்தநாள் வாழ்த்து சொல்வது! அல்லு அர்ஜுன் ரசிகர்களிடம் சிக்கிய நெட்பிளிக்ஸ்!

Loading...

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று தனது 37 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியதை அடுத்து அவருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

அல்லு அர்ஜுனின் 37 ஆவது பிறந்தநாள் நேற்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. கொரொனா காரணமாக சமூகவலைதளங்களில் மட்டுமே அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில் அவர் முதன் முதலாக அவர் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் நடிக்கும் புஷ்பா படத்தின் முதல் லுக் போஸ்டரும் வெளியானது. அந்த புகைப்படத்தை வைரலாக்கி ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

Loading...

இந்நிலையில் அல்லு அவருக்குப் பிறந்த்நாள் வாழ்த்துகள் தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளது நெட்பிளிக்ஸ். நெட்ஃப்ளிக்ஸ் இந்தியா தன் ட்விட்டர் பக்கத்தில் ‘இந்த அழகான புட்டா பொம்மாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்’ எனக் கூறியிருந்தது. புட்ட பொம்மா என்பது அல்லு அர்ஜுன் நடித்து சமீபத்தில் வெளியான அலு வைகுந்தபுரம்லூ என்ற படத்தின் பிரபலமான பாடலின் வரியாகும். ஆனால் புட்ட பொம்மாவுக்கு நிஜமான அர்த்தம் ‘அழகான பெண்’ என்பதாகும்.

இதனால் தங்கள் நடிகரை நெட்பிளிக்ஸ் அவமதிக்கும் விதமாக இந்த பதிவு உள்ளதாக அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கோபமாகி நெட்பிளிக்ஸுக்கு எதிராக கண்டனங்களைப் பதிவு செய்ய, உடனடியாக நெட்பிளிக்ஸ் அந்த பதிவை நீக்கிவியுள்ளது நெட்பிளிக்ஸ்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*