Connect with us

சினிமா

வெளியானது அஜித்தின் வலிமை லுக் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

கடந்த ஆண்டு அஜித்தின் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றியைக் குவித்தன. இதையடுத்து அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள இடங்களில் நடந்து வருகிறது. சென்னையில் சில தினங்களுக்கு முன்பு நடந்த சண்டை காட்சி படப்பிடிப்பின்போது அஜித் காயமடைந்ததாகவும் அதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து தற்போது பொதுவெளியில் அஜித் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சமீப காலமாக மீசை தாடியுடன் எல்லா படங்களிலும் நடித்து வரும் அஜித், அந்த புகைப்படத்தில் கிளீன் ஷேவ் லுக்கில் இருப்பதால் வலிமை படத்தில் அவரது தோற்றம் இப்படித்தான் இருக்கும் என ரசிகர்கள் கருத ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து பலரும் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending