கொரோனா நிவாரண நிதி! அஜித் கொடுத்த 1.25 கோடி ரூபாய்!

கொரோனா நிவாரண நிதி! அஜித் கொடுத்த 1.25 கோடி ரூபாய்!

Loading...

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் நடிகர் அஜித் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு 1.25 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பற்றிய பீதி அதிகமாகியுள்ள நிலையில் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதனால் வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல தொழில்கள் முடங்கியுள்ளன. தொழில் முடக்கத்தால் கடுமையான பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ள நிலையில் விளிம்பு நிலை மக்கள் கடுமையாகப் பாதிக்கபட்டுள்ளனர்.

Loading...

இதையடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களிடம் நிதியுதவி கேட்டுள்ளன. இதையடுத்து தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் நிதி கொடுத்து வரும் தமிழ் நடிகர் அஜித் 1,25 கோடி ரூபாய் நிதியாக அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த தொகையில் 50 லட்சம் பிரதமர் நிவாரண நிதிக்கும், 50 லட்சம் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கும் சென்றுள்ளது எனவும் மீதமுள்ள 25 லட்சம் பெப்ஸி(சினிமா) தொழிலாளர்களின் நலனுக்காக அளிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து நடிகர் அஜித்துக்கு சமுகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துள்ளன.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*