Connect with us

சினிமா

தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்த அஜித் சம்மதித்துள்ளார் -முடிந்தது சர்ச்சை !

வரிசையாக அஜித் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் நடப்பதால் எழுந்த சர்ச்சை இப்போது முடிவுக்கு வந்துள்ளது.

ரஜினி, கமல், விஜய்,அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படப்பிடிப்பினை தமிழகத்தில் எங்கு வைத்தாலும் ரசிகர்கள் கூட்டம் ஒன்று கூடி படப்பிடிப்பிற்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் படப்பிடிப்பினை அரங்கினுள் அல்லது வேறு வெளிமாநிலங்களில் இந்த நடிகர்களின் தயாரிப்பாளர்கள் நடத்தி வந்தனர்.

இதனால் பொருட் செலவு அதிகமாக ஆவதுடன், தமிழகத்தில் சினிமாவை நம்பி வாழும் தொழிலாளர்களின் வருமானமும் பாதிக்கப்பட்டு வந்தது. இதில் குறிப்பாக அஜித்தின் படங்கள் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடர்ந்துநடந்து வந்ததால் அவருக்கு ஃபெப்சியின் சார்பாக கண்டனங்கள் எழுந்தன.

Loading...

இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ஃபெப்சியின் தலைவர் ஆர்கே செல்வமணி இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார். அப்போது பேசிய அவர் ‘தமிழகத்திலேயே படப்பிடிப்பு நடத்துவது சம்பந்தமாக அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது .

Loading...

அதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது ஐதராபாத்தில் நடந்து வரும் ரஜினியின் படத்தின் படப்பிடிப்பும் அடுத்த கட்டத்தில் இருந்து தமிழகத்திலேயே நடைபெறும்’ என தெரிவித்தார்.

ஒரு தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு அதிகபட்சமாக 80 சதவீதமும் தமிழகத்திலேயே நடக்க வேண்டும் என ஃபெப்சியின் சார்பாக பெரிய ஹீரோக்களுக்கு கோரிக்கை வைக்கப் பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending