தாக்க தயாராக இருங்கள் அஜித் தோவல் ஆலோசனைக்கு பின் முடிவு !!!

கடந்த இரண்டு வாரமாக இந்திய எல்லையில் வழக்கத்திற்கு மாறாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு உள்ளது , கொரோனா பதற்றத்தில் இந்திய மக்களை காப்பாற்றும் முயற்சியில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் தீயாக வேலை செய்துவரும் அதேவேலையில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத குழுக்களும் தங்கள் வேலையை காட்ட தொடங்கியுள்ளனர்.

Loading...

எல்லையில் தற்போது பயிற்சிபெற்ற 600 தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஆயுதங்களுடன் ஊடுருவ காத்திருப்பதாகவும் அதன் ஒரு பகுதியாகத்தான் கடந்த வாரம் 3 ம் தேதி காஸ்மீரில் தீவிரவாத குழுக்கள் உள்ளூர் மக்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து தாக்குதலில் ஈடுபட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன, இந்நிலையில் இந்திய அரசு மிக முக்கிய முடிவினை எடுத்துள்ளது.

அதன்படி பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லையில் கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது, மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் நடவடிக்கையிலும் திட்டத்தை தயார் செய்துள்ளது, இது குறித்து மேலும் முக்கிய ஆலோசனைகளை நடத்திய இந்திய இராணுவ உயர் அதிகாரிகளை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

Loading...

அதில் உத்தரவிற்கு காத்திருக்காமல் இந்திய எல்லையில் நுழையும் தீவிரவாத குழுக்களை சுட்டு தள்ள உத்தரவிட்டுள்ளார், மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க மிக பெரியநடவடிக்கையில் இறங்க வேண்டிய சூழல் உண்டாகியிருப்பதாகவும் அதற்காக அத்தனை தியாகங்களையும் செய்ய தயாராக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியா வானிலை ஆய்வு மையம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள இடங்கள் குறித்து வெப்ப நிலை மற்றும் பருவநிலை மாற்றங்கள் குறித்து தகவல்களை தற்போது தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2647 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*