மூன்றில் இரண்டு முடிந்தது ஒன்று மட்டும்தான் பாக்கி பிரதமரிடம் அஜித்தோவல் குழு கொடுத்த அதிரடி ரிப்போர்ட் !!!

இந்தியா- சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கை முன்வைத்து பதற்றம் நிலவும் சூழலில், எல்லையில் சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் வீரமரணம் அடைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி நேற்று அஞ்சலி செலுத்தினார், அதற்கு முன்னர் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர் இராணுவ வீரர்களுடன் உரையாற்றினார்.

Loading...

கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவிற்கு சொந்தமானது என்றும் அதனை எக்காரணத்தை கொண்டும் இந்தியா விட்டு கொடுக்காது எனவும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார், இந்த சூழலில் பிரதமர் மோடி அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷ்ங்கர் ஆகியோரிடம் மூன்று முக்கிய பணியினை கொடுத்திருந்ததாகவும் அதில் இரண்டு முடிந்து விட்டதாகவும் ஒன்று மட்டும் மிச்சம் இருப்பதாக ஆங்கில புலனாய்வு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

வெளியுறவுத்துறை மூலம் சீனாவிற்கு எதிராக உலக நாடுகளை ஒன்று திரட்டுவது, மற்றொருன்று இந்தியாவின் அண்டை நாடுகளை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்தாமல் இந்தியா பக்கம் திருப்புவது, மூன்றாவது சீனாவிற்கு ஆதரவாக இருக்கும் நேபாள் நாட்டு பிரதமரை பதவியில் இருந்து நீக்குவது !

Loading...

இதில் முதல் இரண்டு நிகழ்வுகள் நிறைவேறிவிட்டதாகவும் மூன்றாவது நேபாள் நாட்டு விவகாரம் ஒரு வாரத்திற்குள் முடிவிற்கு வந்துவிடும் என பிரதமரிடம் அஜித் தோவல் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் கடந்த 2017 – ம் ஆண்டு டோக்லாம் சம்பவத்தை சுட்டிக்காட்டி சீனா கம்யூனிஸ்ட் பத்திரிகை அஜித் டோவலை ஒரு சதிக்காரர் எனவும் எதையும் செய்ய துணிபவர் என குறிப்பிட்டு செய்தி வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3897 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*