அப்படியா எங்க இப்ப பண்ண சொல்லு அதிரடி காட்டிய அஜித் தோவல் !! ஊடகத்தில் நடந்த அதிரடி மாற்றம் !!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பத்திரிகை துறையில் நடைபெற்றுவரும் மாற்றங்கள், இதுநாள் வரை பத்திரிகை துறையில் ஆதிக்கம் செலுத்திய இடதுசாரிகள் மற்றும் பெரியாரிஸ்ட் இயக்கங்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது, தனியார் தொலைக்காட்சியில் ஒரு சித்தாந்தத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ஒரு கூட்டம் ஒரே மாதத்தில் அங்கிருந்து வெளியேற்றபட்டுள்ளன.

Loading...

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பிரதமர் மோடி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் ஊடகங்கள், ஊடகவியலாளர்களை கண்டறிந்து அரசுக்கு தெரியபடுத்த, அறிவுறுத்தி இருந்தார் என கூறப்பட்டது , இந்த குழுவில் முன்னாள் IPS அதிகாரிகள் மற்றும் IIT யில் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் இடம் பெற்று இருப்பதாக செய்திகள் வெளியாகின.

அதனை தொடர்ந்து 48 மணி நேரத்திற்குள் இந்தியாவிற்கு எதிராக கருத்துக்களை பரப்பிய 53 மேற்பட்ட இணையதளங்களை உடனடியாக உள்துறை அமைச்சகம் தடை செய்தது, இவை மாதம் பல லட்சம் பார்வையாளர்களை கொண்ட இணையதளங்கள் என்பதும் தொடர்ந்து இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Loading...

அதனை தொடர்ந்து பஞ்சாப், மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் பல அச்சு மற்றும் மெயின் ஸ்ட்ரீம் ஊடகங்களில் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை கொண்ட பிரிவினைவாதத்தை ஆதரிக்க கூடிய பல நபர்கள் பணிபுரிவது கண்டறியப்பட்டது, இவற்றை உறுதி செய்து பொது வெளியில் பேசிய, சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட கருத்துக்களை குழு சேகரித்தது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மற்றும் ஊடக உரிமையாளர்களை டெல்லியில் இருந்த குழு தொடர்புகொண்டு, உங்கள் ஊடகத்தில் பணிபுரியும் நபர்கள் பலர் இந்தியாவிற்கு எதிராக, மக்களை திசை திருப்பி வருவது குறித்து உங்களது கவனத்திற்கு கொண்டு வந்து இருக்கிறோம், இனி நடவடிக்கை எடுப்பதும் எடுக்காததும் உங்கள் விருப்பம் என ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டார்கள்.

அதனை தொடர்ந்துதான் தற்போது பல மாநிலங்களில் மெயின் ஸ்ட்ரீம் ஊடகங்களில் மட்டுமல்ல அச்சு ஊடகங்களில் இருந்தும் பல நபர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்கள், அத்துடன் பல ஊடகங்கள் தங்கள் நிறுவனத்தில் பணி புரியும் பணியாளர்கள் வெளிப்படையாக தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பதிவு செய்யக்கூடாது எனவும் இதனை மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதன் பின்னணியில் பல கட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்துள்ளதும், முக்கிய நபர்கள் மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலும் பலர் தங்கள் பதவியில் இருந்து விலகி இருக்கிறார்களாம், இப்போது பிரிவினைவாத சிந்தனையை விதைத்த ஊடகவியலாளர்களை கண்டறிந்து கச்சிதமாக சோலியை முடித்த தோவல் குழு..,

தற்போது சீனாவிடம் தொடர்பில் உள்ள பத்திரிகையாளர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க களத்தில் இறங்கி இருக்கிறார்களாம், எங்கே இப்போது எந்த ஊடகமாவது இந்தியாவிற்கு எதிரான பிரிவினைவாத கருத்துக்களை பேச சொல்லு என கெத்தாக நிற்கிறதாம் தோவல் குழு. இனி தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னர் பல அதிரடி மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்க படுகிறது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3944 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*