Connect with us

#24 Exclusive

அய்யாக்கண்ணு எடுத்த விபரீத முடிவு? உயிர் பிழைப்பாரா?

Published

on

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு சமீப காலமாக, ஊடகங்களில் அதிகம் கவனம் பெறுவது இல்லை. சரியாக ஒரு ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் இருந்து டெல்லி சென்று வித விதமான போராட்டங்களில் இறங்கி தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தலைப்பு செய்திகளில் ஈடுபட்டு வந்தார் அய்யாக்கண்ணு.

ஒரு கட்டத்தில் ராகுல்காந்தி முதல் தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சி தலைவர்கள் அனைவரும் டெல்லி சென்று அய்யாக்கண்ணுவை சந்தித்து., போராட்டத்திற்கு ஆதரவளித்தனர் அன்றைய நாளில் அய்யாக்கண்ணு பெயர் வெளியாகாத பத்திரிகைகளே கிடையாது. இப்படி ஓடி கொண்டிருந்த அய்யாக்கண்ணுவின் போராட்ட வாழ்க்கை, முருகன் கோவிலில் கன்னத்தில் அறையுடன் முடிவுக்கு வந்தது என்றே கூறலாம்.

கோவில்களில் யாரும் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று விதி இருக்கும் போது துண்டு பிரசுரங்களை விநியோகித்து, மோடிக்கு நல்ல புத்தியை கொடுங்கள் என்று அய்யாக்கண்ணு பக்தர்களிடம் சொல்ல அங்கு வந்த பாஜக பெண்மணி அதனை தடுக்க இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது, ஒரு கட்டத்தில் அய்யாக்கண்ணு அந்த பெண்ணை தவறாக பேச பளார் என்று கன்னத்தில் அறைந்தார் அந்த பெண்.

அன்று முதல் தலைப்பு செய்திகளில் இடம்பெற்ற அய்யாக்கண்ணு, தற்போது பெட்டி செய்திகளில் கூட இடம்பெறுவது இல்லை, இந்நிலையில் தான் இழந்த செல்வாக்கை மீண்டும் பிடிக்க முன்பு கோவணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அய்யாக்கண்ணு, புது விதமான போராட்டத்தில் ஈடுபடவுள்ளார். அது ஒரு விஷ பரீட்சை என்றே சொல்லலாம்.

ஆம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அய்யாக்கண்ணு இன்று பல கோரிக்கைகளை வலியுறுத்தி பாம்பினை பிடித்து சாப்பிடுவதாக அறிவித்துள்ளார். உண்மையில் அவர் ஏதேனும் புது முயற்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக உயிருள்ள பாம்பை பிடித்து சாப்பிட்டால் நிலைமை என்னவாகும் என்று ஒரு தரப்பினர் கவலையில் இருக்க !

ஆனால் மற்றொரு தரப்பினரோ அய்யாக்கண்ணு விஷப்பாம்பினை பிடித்து சாப்பிடுவாரா? இல்லை மீன் துண்டை பாம்பு கறி என்று சொல்லுவாரா? என்று இப்போதே பெட் கட்டி வருகின்றனர்.

ஒரு காலத்தில் எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே?

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share