Connect with us

#24 Exclusive

ஏர்டெல்க்கு போட்டியாக அட்டகாசமான புதிய திட்டத்தை அறிவித்த ஜியோ ! இனி wifi

Published

on

அம்பானியின் ஜியோ நிறுவனம் பல்வேறு புதிய புதிய அறிவிப்புகளை அறிவித்த வண்ணம் உள்ளது. மேலும் இந்தியாவில் 5ஜி சேவை வெளியிடுவதற்கு முன்பே டெலிகாம் ஆபரேட்டர்களிடமிருந்து மற்றொரு காலிங் பெரும் நெட்வொர்க் தொழில்நுட்பமானது தற்போது அறிமுகமாகியுள்ளது.

இந்திய தொலை தொடர்பு துறையில் ஜியோவின் வருகைக்கு பிறகே அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தது என்று கூறலாம், அந்த அளவு அதிரடி சலுகைகளை வழங்கி புதிய வாடிக்கையாளர்களை பெற்றது, நிறுவனம் தொடங்கிய ஒரு ஆண்டில் ஏர்டெல், வோடபோன் போன்ற முன்னணி நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சந்தையில் முதலிடம் பிடித்தது.

இதனைத்தொடர்ந்து ஜியோவிலும் வாய்ஸ் ஓவர் வைஃபை என்ற சேவை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அதாவது மோசமான சூழ்நிலைகளில் சிக்கும் வாடிக்கையாளர்கள் இந்த புதிய இணைப்பு இருந்தால்,அவர்கள் வாய்ஸ் ஓவர் வைஃபை வசதியை பயன்படுத்தி தங்கள் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் சோதனை முறையில் பயன்பாட்டில் இருக்கும் இந்த சேவை விரைவில் பயன்பாட்டில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...

ஏர்டெல் முன்பே வாய்ஸ் ஓவர் முறையை அறிமுகம் செய்திருந்தது ஆனால் குறிப்பிட்ட மொபைல்களில் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் ஜியோ அதற்கு போட்டியாக அனைத்து மொபைல்களுக்கும் வழங்கும் என்று தகவல் வெளியாகியிருப்பதால் இது ஏர்டெல்லை பின்னுக்கு தள்ளும் என்று எதிர் பார்க்க படுகிறது.

Loading...
Loading...

Trending