Connect with us

#24 Exclusive

ஏர்டெல்-ஜியோ வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி செய்தி ! இந்த வசதி இனி உங்களுக்கு இல்லை !

தொலை தொடர்பு நிறுவனத்தில் நிகழும் போட்டியின் காரணமாக அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் போட்டி போட்டுகொண்டு புது புது சலுகைகளை அறிவித்து வந்தனர், அதனால் பல்வேறு சலுகைகள் செல்போன் பயனாளர்களுக்கு கிடைத்தன, அதிலும் ஜியோவின் வருகைக்கு பிறகு 2ஜி விலையை விட குறைவான விலையில் 4ஜி டேட்டா இலவசமாக கிடைத்தது.

அதனை தொடர்ந்து செல்போன் பயனாளர்கள் பலரும் ஜியோவினை நோக்கி படையெடுக்க தங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்ள ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் ஜியோவிற்கு இணையான சலுகைகளை வழங்கினர், ஆனால் தற்போது அதற்கு நேர்மறையாக அனைத்தும் மாறி வருகிறது, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி தங்கள் கட்டணத்தை 40% வரை அனைத்து நிறுவனங்களும் உயர்த்தினர்.

இந்நிலையில் தற்போது இலவச கால்கள் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது தொலை தொடர்புகளில் ஏர்டெல் டூ
ஏர்டெல், ஜியோ டூ ஜியோ இல்லாமல் வேறு
ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்தின்
எண்ணுடன் பேசும் வரம்பற்ற இலவச
முறை இந்த மாதத்துடன் முடிவிற்கு வருகிறது. அழைப்பு மற்றும் டேட்டாவுக்கு குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கும்படி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ட்ராய்
உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முறை டிசம்பர்
31 முதல் அமலுக்கு வரும் என ட்ராய் தெரிவித்துள்ளது.

Loading...

இதனால் இனி வேறு நிறுவனத்திற்கு வரம்பற்ற முறையில் பேசமுடியாது, வோடபோன் நிறுவனம் ஏற்கனவே இந்த முறையை அமல்படுத்திவிட்டதால் தற்போது ஏர்டெல் மற்றும் ஜியோ வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியை சந்தித்துள்ளனர் இனி இலவசமாக மணிக்கணக்கில் பேசும் வசதி உங்களுக்கும் கிடையாது.

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending