Connect with us

Uncategorized

இனி யாரும் வெளிநாடுகளிலிருந்து தங்கம், போதை பொருட்கள் கடத்த முடியாது…மத்திய அரசின் அதிரடி திட்டம்.

Published

on

இந்தியா முழுவதிலும் தற்போது வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதை பொருட்கள் போன்றவை அதிக அளவில் கடத்தப்படுகிறது. நாளுக்கு நாள் அங்கும் இங்கும் கடத்தல் தொடர்பான செய்திகள் வந்த வண்ணனமாக உள்ளது. என்னதான் விமானநிலையங்களில் அதிக அளவில் பாதுகாப்பு சோதனைகள் நடந்தாலும், இப்படிப்பட்ட கடத்தல்களை தடுக்க முடியவில்லை. அது இன்று வரை விமான நிலைய அதிகாரிகளின் சவாலாகவே உள்ளது. இதை தடுக்க மத்திய அரசு மிக முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் , விமான நிலையங்களில் ஒவ்வொரு பயணிகளையும் பாதுகாப்பு சோதனையின் பொது காவலர்களின் மெட்டல் டிடக்டர்கள் மூலம் சோதனை செய்வது வழக்கம். பயணிகளின் லக்கேஜ்கள் முழுவதுமாக ஸ்கேனர் மூலம் சோதனை செய்யப்பட்டு, சந்தேகிக்கும்படியான பொருட்கள் கண்டறியப்படுகிறது . ஆனால், உடலில் பொருட்களை மறைத்து வைத்திருந்தால் அதனை துல்லியமாக கண்டறிய முடிவதில்லை.

இதனையடுத்து, இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் உடலை ஸ்கேன் செய்யும் , உடல் ஸ்கேனர்கள் கட்டாயமாக அமல்படுத்தப்பட உள்ளன. இது குறித்து மத்திய சிவில் விமான பாதுகாப்பு துறை , “ஒரு வருடத்தில் நாட்டில் உள்ள அனைத்து முக்கியமான விமான நிலையங்களிலும், 2 ஆண்டுக்குள் இந்தியாவிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் உடல் ஸ்கேனர்கள் கட்டாயமாக்கப்படும்” என அறிவித்துள்ளது.

Loading...

Loading...

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com