Connect with us

#24 Exclusive

ரஜினியை அடுத்து கமல்ஹாசனை தாக்கும் முதல்வர் பழனிச்சாமி

கமல், ரஜினி ஆகிய இரண்டு திரையுலக பிரமுகர்கள் அரசியலில் தற்போது நுழைந்துள்ளதால் ஏற்கனவே முதல்வர் பதவியிலிருந்து இருப்பவரும், முதல்வர் பதவிக்காக கனவு கொண்டு இருக்கும் அரசியல்வாதிகளும் தற்போது கலக்கமடைந்துள்ளனர்

இதில் கமல்ஹாசன் களத்தில் இறங்கிய களப்பணிகள் நடத்தி வருகிறார். ரஜினிகாந்த் அவர்களும் விரைவில் கட்சி ஆரம்பித்து வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Loading...

இருவரும் தனித்தனியாகவோ அல்லது கூட்டணி அமைத்து போட்டியிட்டால் அதிமுக மற்றும் திமுகவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரஜினிகாந்த் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Loading...

இந்த நிலையில் இதுவரை அதிமுக அமைச்சர்கள் மட்டுமே ரஜினி மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரையும் விமர்சனம் செய்து வந்த நிலையில் தற்போது முதல்வர் பழனிசாமி அவர்களே நேரடியாக இருவரையும் தாக்கத் தொடங்கி விட்டார்

சமீபத்தில் அரசியல் வெற்றிடம் குறிட்து ரஜினிகாந்த் அளித்த பேட்டி குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் பழனிசாமி ’தமிழகத்தில் வெற்றிடம் என்ற ஒன்று இல்லை என்பது உள்ளாட்சித் தேர்தல் வெற்றியின் மூலம் நிரூபணம் ஆகி விட்டதாகவும், ரஜினி ஒரு நடிகர் என்றும், அவர் அரசியல்வாதியாக இன்னும் ஆகவில்லை என்றும், எனவே வெற்றிடம் குறித்து அவர் பேசுவதற்கு தகுதியற்றவர் என்றும் கூறியிருந்தார்

இந்த நிலையில் ரஜினியை அடுத்து இன்று கமல்ஹாசனையும் முதல்வர் விமர்சனம் செய்துள்ளார் ‘அரசியல் பற்றி கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்? தொண்டர்களாவது தனது படத்தை பார்க்கட்டும் என்றுதான் கமல் நடித்துக்கொண்டிருக்கிறார் என்று முதல்வர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending