இனி நேரலையில் குணசேகரன் இந்த கேள்வியை யாரிடமும் கேட்கமாட்டார் சரியான முறையில் பதிலடி கொடுத்த கோவை சத்யன் !

நடுநிலை நெறியாளர் என்பதை மறந்து தன்னை திமுக செய்தி. தொடர்பாளர் போன்று தனியார் தொலைக்காட்சியின் நெறியாளர் குணசேகரன் மாறிய நிலைமை நிகழ்ச்சியை பார்த்தவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Loading...

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தொடர்ந்து திமுக இஸ்லாமியர்களை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் அடைந்து வருவதாகவும், இதே நிலை நீடித்தால் பதிலடி கொடுக்க இந்து தீவிரவாதம் வரலாம் என கூறியிருந்தார் இந்நிலையில் அவரது பேச்சிற்கு சாதிகளை கடந்து மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்தது, இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக இன்று அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என ஆளுநர் அலுவலகத்தில் புகார் கொடுத்தது.

அதனை முன்வைத்து தனியார் தொலைக்காட்சியில் விவாதம் நடைபெற்றது அதில் நெறியாளர் குணசேகரன் அதிமுக பாஜகவின் நிறத்திற்கு மாறியதா? அதிமுக பயன்படுத்தும் வார்த்தைகள் பாஜக வார்த்தைகளை போன்று உள்ளதே என கேள்வி எழுப்பினார் மேலும் அதிமுக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சியா எனவும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

Loading...

இதற்கு சரியான முறையில் அதிமுக பேச்சாளர் கோவை சத்யன் பதிலடி கொடுத்தார், அமைச்சர் எந்தமதத்தை குறித்தும் பேசவில்லை வாக்குவங்கி அரசியலுக்காக ஒருசமூகத்தை தூண்டிவிட்டால் பதிலுக்கு மற்றொரு எதிர்வினை நிகழும் என குறிப்பிட்டார் அப்போது குறிப்பிட்ட நெறியாளர் குணசேகரன் இதுதான் அதிமுகவின் கருத்தா எனவும் கேள்வி எழுப்ப.,

அப்போது குணசேகரனை நோக்கி இவை அனைத்தும் ஊடகம் நடத்தும் செயல் எனவும், அமைச்சர் சொன்ன கன்னியாகுமரி வில்சன் கொலை, சிவகாசி சிறுமி பலாத்கார கொலை குறித்து நீங்கள் என்ன விவாதம் நடத்துனீர்கள், ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையின் மீட்பு பணியை விடாமல் நேரலை செய்த 40 ஊடகங்கள் என்ன செய்தன என கேட்க குணசேகரனிடம் பதில் இல்லை..,

நாங்கள்தான் அனைத்து சம்பவம்களையும் நேரலை செய்தோமே என கேட்க எங்கே விவாதம் நடந்ததா ஒன்னும் இல்லை எனவும் இதுவரை உங்கள் தொலைக்காட்சி நடுநிலை என நம்புகிறேன் என பதிலடி கொடுக்க வாயடைத்து போய்விட்டார், அவரது முகத்தில் இனம் புரியாத அதிர்ச்சி காணப்பட்டது, வழக்கத்திற்கு மாறாக நெறியாளர் அதிமுக இடையே நடக்கும் விவாதம் போல் இல்லாமல், அதிமுக திமுக இருவர் மோதிக்கொண்ட விவாதம் போல் இருந்தது என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அமைதியான முறையில் நெறியாளருக்கு உரைக்கும்வண்ணம் பதிலடி கொடுத்த கோவை சத்யனுக்கு பலரும் பாராட்டுகளை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2699 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*