தேர்தலை ரத்து செய்துவிட்டு மீண்டும் மோடியை பிரதமராக்குவோம்! நடிகையின் சகோதரி கருத்து!

தேர்தலை ரத்து செய்துவிட்டு மீண்டும் மோடியை பிரதமராக்குவோம்! நடிகையின் சகோதரி கருத்து!

Loading...

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் சகோதரி ரங்கோலி அடுத்த தேர்தலை ரத்து செய்துவிட்டு மீண்டும் மோடியையே பிரதமராக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,00,000 ஐ தாண்டியுள்ளது. அதேப் போல வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,13,000 தாண்டியுள்ளது. இதனால் வைரஸ் பரவியுள்ள அனைத்து நாடுகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 10,000 ஐ நெருங்கி வருகிறது.

Loading...

இந்தியாவில் கடந்த 20 நாட்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முன்னதாகவே இந்தியப் பொருளாதாரம் மிகவும் மந்தமான நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத்தின் சகோதரியான ரங்கோலி சந்தேல் தெரிவித்த கருத்து சமூகவலைதளங்களில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க இருக்கிறோம். இரண்டு ஆண்டுகளுக்குள் மோடி பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து விடுவார். அதனால் தேர்தலை நடத்தி கோடிக்கணக்கில் பணம் செலவு செய்வதை விடவும் அதை ரத்து செய்துவிட்டு மீண்டும் மோடியையே பிரதமராக அறுவித்து நம்மை வழிநடத்த வைக்க வேண்டும் தேர்தல் நடத்தி தேவையில்லாமல் வளங்களை வீணடிப்பதை விடவும் இந்த புரட்சிகரமான முடிவை நாம் எடுப்பது சிறப்பாக இருக்கும்.’ எனக் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து சமூகவலைதளங்களில் கண்டனங்களையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*