கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட தமிழ் நடிகை! வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி!

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட தமிழ் நடிகை! வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி!

Loading...

தமிழ் நடிகையான பிந்து மாதவி வசிக்கும் அபார்ட்மெண்ட்டில் உள்ள ஒருவருக்குக் கொரோனா பரவியதை அடுத்து அந்த குடியிருப்பில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழில் கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த பிந்து மாதவி அதன் பின்னர் வெப்பம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களில் நடித்தார். இதையடுத்து சென்னையிலேயே வசித்து வரும் அவர் அவ்வப்போது சமூகவலைதளங்கள் மூலமாக ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.

Loading...

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். அதில் ‘நான் வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பை உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை மாநகராட்சி அபார்ட்மெண்ட் வளாகம் முழுவதையும் சீல் வைத்து கேட்டை இழுத்து மூடி விட்டது. மேலும் அங்குள்ள அனைவரும் 14 நாட்கள் வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்தியுள்து. இதனால் நானும் என்னுடைய வீட்டில் 14நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொண்டுள்ளேன்.’ எனக் கூறியுள்ளார்.

இது சமம்ந்தமாக மாநகராட்சி அதிகாரிகள் அந்த அபார்ட்மெண்ட் முன் ஸ்டிக்கர் ஒட்டும் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*