நடிகை நமிதாவிற்கு கொடுக்கப்பட்ட கட்சி பொறுப்பு பாஜகவில் புகைச்சல் !!!

தமிழக பாஜக தலைவர் முருகன் இன்று மாநிலத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார், நிர்வாகிகள் நியமிக்கபட்டு மூன்று ஆண்டுகள் கடந்ததை தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Loading...

அதன் படி வானதி சீனிவாசன், எம்.சக்கரவர்த்தி, நயினார் நாகேந்திரன், கே.எஸ்.நரேந்திரன், எம்.முருகானந்தம், எம்.என்.ராஜா, ஏ.ஆர்.மகாலட்சுமி, கனகசபாபதி, புரட்சிக்கவிதாசன் ஆகியோரும் துணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். தமிழக பா.ஜ., பொது செயலாளராக பேராசிரியர் ஸ்ரீனிவாசன் , கே.டி.ராகவன், ஜி.கே.செல்வகுமார், கரு.நாகராஜன்
மாநிலச் செயலர்கள்: கே.சண்முகராஜ், டால்பின் ஸ்ரீதர், டி.வரதராஜன், ஏ.பாஸ்கர், ஆர்.உமாரதி, டி.மலர்க்கொடி, பி.கார்த்தியாயினி, பார்வதி நடராஜன், சுமதி வெங்கடேஷ்.

பொருளாளர்: எஸ்.ஆர். சேகர்
இணைப் பொருளாளர்: சிவ.சுப்பிரமணியன்
மாநில அலுவலகச் செயலர்: எம்.சந்திரன், வழக்கறிஞர் பிரிவு தலைவர்: பால் கனகராஜ்
மாவட்ட தலைவர்கள்:
திருச்சி புறநகர் – எஸ்.ராஜேந்திரன், கடலூர் கிழக்கு – ஜி.மணிகண்டன், சேலம் மேற்கு – எஸ்.சுதிர் முருகன், கோவை தெற்கு – என்.வசந்தராஜன், நீலகிரி – எச்.மோகன்ராஜ்
மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவராக நிர்மல் குமார்.

Loading...

மாநில இளைஞரணி தலைவராக வினோஜ்செல்வம், மாநில மீனவ பிரிவு தலைவராக சதீஷ்குமார், நெசவாளர் பிரிவு தலைவராக பாலமுருகன், மருத்துவ பிரிவு தலைவராக விஜய்பாண்டி, தமிழ்வளர்ச்சி மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் பிரிவு தலைவராக ஆதித்யா கோகுலகிருஷ்ணன், மாநில செய்தி தொடர்பாளராக நாகராஜன், ஊடக தொடர் பிரிவு தலைவராக பிரசாத், சிறுபான்மை அணி தலைவராக ஆஷீம்பாஷா, விவசாய அணி தலைவராக நாகராஜ், நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக காங்கிரஸ் கட்சி யிலிருந்து விலகி பா.ஜ.வில் இணைந்த தாஸ் பாண்டியனுக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நடிகைகள் நமீதா, கவுதமி, குட்டி பத்மினி, சவுதாமணி ஆகியோருக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதில் நடிகை நமிதாவிற்கு மாநில செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கியது ஏன் என சமூக வலைத்தளங்களில் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர், குறிப்பாக கட்சியில் இணைந்த பிறகு எந்தவித கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாத நமிதாவிற்கு பதவி வழங்கியது ஏன் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3897 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*